4 கேள்விகளை மாநில அரசு புகுத்திவிட்டு கேட்க சொல்லும்.. நாங்க பதில் தரனுமா? சீறிய நிர்மலா சீதாராமன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு அரசு செய்தியாளர்களிடம் 4 கேள்விகளை புகுத்திவிட்டு கேட்க சொல்லும்.. நாங்கள் பதில் சொல்லிகிட்டே இருக்கனும்? என டெல்லியில் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபத்தைக் காட்டினார்.

தென் தமிழ்நாடு மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தென் மாவட்ட வெள்ளத்தின் போது முப்படைகள் மீட்பு பணிகளை எவ்வாறு முன்னெடுத்தது என விவரித்தார். இதன் பின்னர் தமிழ்நாடு அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Union Minister Nirmala Sitharaman loses cool in Delhi Press meet on Tamil Nadu Flood

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கையை முறையாக தரவில்லை. அதீத பெருமழையை சென்னை வானிலை மையம் கணிக்கவில்லை என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பொதுவான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் தந்த போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரொம்பவே ஆவேசப்பட்டார்.

முதலில் பேசுகையில், வானிலை அறிக்கை கொடுக்கக் கூடிய மையம் சென்னையில் இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கும் மழை வெள்ளத்தைப் பற்றி வானிலை மையம் டிசம்பர் 12-ந் தேதி தகவல் கொடுத்திருக்கிறது. டிசம்பர் 16,17 தேதிவாக்கில் தீவிரமான மழை தென் மாவட்டங்களில் வரும் என டிசம்பர் 12-ந் தேதியே கொடுத்திருக்காங்க. சென்னையில் இருப்பது அதிநவீன கருவிகளைக் கொண்ட வானிலை மையம் என விவரித்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழ்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர், நார்மலா பெய்யுற மழையை விட இவ்வளவு மழை பெய்யும் என துல்லியமாக சொல்லி இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்போம் என தமிழ்நாடு அரசு சொல்கிறது என குறிப்பிட்டார். இதற்கு நேரடியாக பதில் சொல்லாத மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் லாவணி கச்சேரி போல, நார்மலா மழை பெய்யுறதுக்கு எடுத்த ஏற்பாடு என்ன? அது கூட அங்க இல்லைங்களே.. நீங்க கேட்ட கேள்விக்கு பதிலும் சொல்றேன்..அதை தாண்டி இன்னொன்றும் சொல்றேன். நார்மலா மழை பெய்யுறதுன்னா கூட அந்த மாவட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்து என தொடங்கி சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ரூ4,000 கோடி எங்கே என்கிற அரசியல் கேள்வி வரைக்கும் போனார் நிர்மலா சீதாராமன்.

ஆனாலும் வானிலை மையத்தை மூட வேண்டும் என தமிழ்நாட்டில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதே என்றெல்லாம் மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதாவது அதிகனமழை பெய்யும், கனமழை பெய்யும் என்றுதான் வானிலை மையம் சொல்கிறது. ஆனால் இவ்வளவு மழை பெய்யும் என துல்லியமாக எவ்வளவு நேரம், எவ்வளவு செ.மீ. மழை பெய்யும் என சொல்வதில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆகையால் வானிலை ஆய்வு மையத்தையே மூட வேண்டும் என்கிறார்களே ஒரு செய்தியாளர் விவரித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இல்லைங்க குற்றச்சாட்டு வைக்கலாம். அதற்கு விவரமும் எடுத்து சொல்லனும்.. கனமழைன்னு சொன்னதற்கு எடுத்த ஸ்டெப்ஸ் என்னங்க? நான் அதுக்கு பதிலா சொல்றேன் என்று கூறியவர் ஒரு கட்டத்தில், 4 கேள்விகளை மாநில அரசு உங்ககிட்ட புகுத்திவிட்டு கேட்க சொல்லும். அதுக்கு மத்திய அரசு பதில் சொல்லனும் என இறுக்கமாக பதிலளித்தார். டெல்லி தமிழ்நாடு செய்தியாளர்களிடையே நிர்மலா சீதாராமனின் இத்தகைய சீற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+