டிவி ஷோவில் கருச்சிதைவு.. வலினா என்னனு எனக்கு தெரியும்.. மாதவிடாய் லீவ் சர்ச்சையால் உருகிய ஸ்மிருதி
டெல்லி: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியது சர்ச்சையானது. இதையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் வலினா என்னனு எனக்கு தெரியும். டிவி ஷோவில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்கலங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. இவர் தான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார்.

ஸ்மிருதி இரானி மாடலிங் துறையில் சாதிக்க விரும்பினார். 1998 ல் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு மாடலிங் துறையில் இருந்து நடிகையானார். பல்வேறு டிவி ஷோக்களில் அவர் பங்கேற்று வந்தார். அதன்பிறகு 2003ம் ஆண்டில் தான் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து 2004ல் மகாராஷ்டிரா பாஜக இளைஞர் பிரிவின் துணை தலைவரானார். 2010ல் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரானார். அதன்பிறகு 2011ம் ஆண்டில் குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் ராஜ்யசபா எம்பி என்பதன் மூலமாக அவர் மத்திய அமைச்சரானார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி எம்பியாகி மத்திய அமைச்சராக உள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை அவர் தற்போது கவனித்து வருகிறார்.
"I suffered a miscarriage on set," Smriti Irani recalls her days in the TV industry#ANIPodcastwithSmitaPrakash #SmritiIrani #PeriodLeaveDebate #MenstrualLeave
— ANI (@ANI) December 22, 2023
Explore the Full Episode here: https://t.co/txiyGx1lu6 pic.twitter.com/jzMVL7xNu4
இந்நிலையில் ஸ்மிருதி இரானி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி பேசியது விவாதத்தை கிளப்பியது. அதாவது ராஜ்யசபாவில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஸ்மிருதி இரானி, ‛‛மாதவிடாய் என்பது ஊனம் இல்லை. அது சுழற்சி முறையில் வரும் உடல் சார்ந்த நிகழ்வாகும். பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு இயற்கையான நிகழ்வாகும். இதனால் மாதவிடாய் நாளில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேவையில்லை'' என்றார். ஸ்மிருதி இரானியின் இந்த பதில் தான் விவாதத்தை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் வலைதளங்களில் அவரை திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ஸ்மிருதி இரானி அளித்த பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஸ்மிதா பிரகாசுடன் போட்காஸ்ட் மூலம் ஸ்மிருதி இரானி பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்மிருதி இரானி விளக்கமளித்தார். இதுதொடர்பாக ஸ்மிருதி இரானி கூறியதாவது:
மாதவிடாய் விடுப்பு சர்ச்சை தொடங்கியதும் என்னை பலர் விமர்சனம் செ்தனர். ஸ்மிருதி இரானிடம் vanity van இருந்தது. அதனால் அவருக்கு எந்த வலியும் தெரியாது என்றனர். ஆனால் உண்மையில் எனக்கு டிவி ேஷா செட்டில் கருச்சிதைவு ஏற்பட்டது. எனக்கு குழந்தை பிறந்த பிறகு நான் 2, 3 நாட்களே ஆன நிலையில் வேலைக்கு சென்றுள்ளேன். பணி செய்யும் இடத்தில் குழந்தைக்கு உணவூட்டுவதற்கு தேவையான வசதிகள் அப்போது இல்லை.
நான் பணிக்கு செல்லும் ஸ்டூடியோவுக்கும், நான் வசிக்கும் இடத்துக்கும் 10 நிமிடம் இடைவெளி இருந்தது. என் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக மதிய உணவு, தண்ணீர், தேநீர் இடைவேளைகளை தவிர்த்து இருக்கிறேன். படப்பிடிப்புகளின்போதும் தேவையான வசதிகள் எனக்கு செய்து தரப்படவில்லை. ஆனாலும் வேலை செய்தேன்.
இந்த வேலை என்பது 12 மணிநேரமாக இருக்கலாம். சில நேரங்களில் 16 மணிநேரம் வரை செல்லும். இரவு நேரத்தில் கூட பணி செய்துள்ளேன். இதனால் நான் நாடாளுமன்றத்தில் எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினேன். பணியிடத்தில் பெண்கள் பாகுபாடுடன் நடத்தப்படக்கூடாது. துன்புறுத்தலுக்கு ஆளாக கூடாது என நினைப்பவள் நான். இதனால் தான் மாதவிடாய் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கையை எதிர்த்தேன்" என தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications