டெல்லி ஏர்போர்ட்- கொரோனா சோதனைக்கு மறுப்பு-பயணிகள் இல்லாமல் யு.எஸ் விமானம் நியூயார்க் ரிட்டர்ன்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானிகள் குழு மறுத்துவிட்டது. இதனையடுத்து பயணிகளை ஏற்றாமலேயே நியூயார்க் நகருக்கு யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் திரும்பியது. தற்போது இந்தியாவுக்கான விமான சேவைகளை அந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நாட்டில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு பயண தடை விதித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.
அப்போது அந்த விமானத்தின் விமானிகள் உள்ளிட்ட குழுவினரை கொரோனாவுக்கான RT-PCR பரிசோதனை செய்ய விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் விமானிகள் குழுவினரோ கொரோனா RT-PCR பரிசோதனை செய்ய மறுத்துவிட்டனர்.
அத்துடன் பயணிகள் யாரையும் ஏற்றாமலேயே வெறும் விமானமாகவே நியூயார்க் நகருக்கு அந்த விமானிகள் விமானத்தை இயக்கினர். இதன்பின்னர் யுனைடெட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். விரைவில் மாற்று விமான சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications