இந்தியா தாய் நாடுதான்.. ஆனா செட் ஆகல! அமெரிக்கா ரிட்டன் இளைஞர் வேதனை
டெல்லி: கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு, இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவர் தன்னுடைய மன குமுறலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இந்தியா தாய் நாடாக இருந்தாலும் அந்நியமாக உணர்வதாக கூறியிருக்கிறார்.
அவருடைய குமுறல்களுக்கு பலரும் பல்வேறு விதமான பதிலளித்திருக்கின்றனர். நீங்களும் அமெரிக்கா ரிட்டன் ஆனவராக இருந்தால், அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா என பாருங்கள்.

அமெரிக்காவில் உள்ள முன்னணி டெக் நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்ந்த இந்திய இளைஞர் ஒருவர், கடந்த 2024ம் ஆண்டு வேலை இழந்தார். இவருடன் 300 பேர் சேர்ந்து வேலையை இழந்திருக்கின்றனர். ஒரு வேலை போனால் என்ன இன்னோரு வேலை கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கொண்டிருந்தார். இருப்பினும் எவ்வளவு தேடியும் வேலை கிடைக்கவில்லை. எனவே அவரது எச்.1பி விசாவும் காலாவதியானது. அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையை பெற விண்ணப்பித்திருந்தார். அந்த கனவு தற்போது தகர்ந்து போய் இருக்கிறது.
இதனையடுத்து ஜனவரி மாதம் இந்தியா திரும்பியிருக்கிறார். இந்தியா திரும்பிய அவர், இது எனது தாய் நாடுதான், இருந்தாலும் எனக்கு அந்நியமாகவே இருக்கிறது என்று புலம்பியுள்ளார். இதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
அதாவது இந்தியாவில் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தங்கி பார்த்திருக்கிறார். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. "எனக்கு இந்த வாழ்க்கை பொருந்தவே இல்லை. அல்லது என்னால் இந்த வாழ்க்கைக்கு பொருந்தி போக முடியவில்லை. 11க்கும் மேற்பட்ட பிரச்சனையால்தான் இப்படி தோன்றுகிறது.
சீரற்ற சாலைகள், காற்று மாசு, மோசமான உள்கட்டமைப்பு, இஷ்டத்திற்கும் வாகனங்களை ஓட்டுவது, திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அமைப்பு மொத்தமாக சீர் கெட்டுக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். "நீங்கள் சொல்வது உண்மைதான் தல. நானும் இதை பீல் பண்ணியிருக்கேன்" என 2023ல் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "இங்குள்ள பிரச்சனைகள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடாது. துபாய், சிக்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏதாவது ட்ரை பண்ணுங்களேன்" என்று கூறியுள்ளார்.
வேறு சிலரோ, "இந்தியாவில் சாமானிய மக்கள்தான் அதிகம். இங்கு பொதுநல உணர்வு கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். இருக்க முடிஞ்சா இரு. இல்லன்னா வேற இடத்தை பார்த்துக்கோ" என்றும், "நானும் இப்படி உங்களை போல பாதியில் வந்தவன்தான். இப்போ ஐரோப்பாவுக்கு போக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சம்பளம் கம்மியா இருந்தாலும், சுத்தமான காத்தும், அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
வாசகர்களான உங்களுக்கு இப்படியான அனுபவம் ஏதேனும் இருக்கிறதா? பெருநகரங்களிலிருந்து இரண்டாம் தர நகரங்களுக்கு வந்து வாழும்போது இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா? உதாரணத்திற்கு சென்னை, ஹைதராபாத்தை விட்டு விட்டு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வந்து வேலை பார்த்து இருக்கிறீர்களா? அல்லது வெளிநாடுகளிலிருந்து வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து வேலை பார்க்கும் அனுபவம் இருக்கிறதா? அதை பகிருங்கள்.












Click it and Unblock the Notifications