டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்லாக் 3.0.. நாடு முழுக்க சமூக இடைவெளியோடு சுதந்திர தினம் கொண்ட அனுமதி.. மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: அன்லாக் 3.0 செயல்முறையின் கீழ் நாடு முழுக்க சுதந்திர தின கொண்டாட்டம் சமூக இடைவெளியோடு நடக்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது .

கொரோனா லாக்டவுன் இப்படி அமலில் இருக்கும் நிலையில் தற்போது நாடு முழுக்க சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி கொண்டாட இருக்கிறது.

Unlock 3.0: Independence Day allowed all over India with social distance

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பும், எல்லை பிரச்சனைகளும் இருக்கும் நிலையில் தற்போது இந்தியா தனது சுதந்திர நாளை எதிர்நோக்கி உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இடையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஜூலை 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது. இதனால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதில்தான் சுதந்திர தினம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி நாடு முழுக்க சுதந்திர தினத்தை கொண்டாடலாம். எப்போதும் போல முதல்வர்கள் சுதந்திர தினத்தை கொடி ஏற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். சுதந்திர தின கொண்டாட்டம் சமூக இடைவெளியோடு நடக்க அனுமதி அளிக்கப்படும்.

இந்தியாவின் ரஃபேல், சீனாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி? முழு விவரம்இந்தியாவின் ரஃபேல், சீனாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி? முழு விவரம்

மக்கள் முறையான சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாஸ்க் அணிந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும், என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Unlock 3.0: Independence Day allowed all over India with social distance on August 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X