அன்லாக் 4.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்.30 வரை லாக்டவுன்.. எது செயல்படும்.. எது செயல்படாது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை லாக்டவுன் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்லாக் 4.0 தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன மாதிரியான சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது, எதற்கெல்லாம் தடைகள் தொடரும் என்று முழு விவரம் வெளியாகி உள்ளது.

கொரோனா அன்லாக் 4.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஆகஸ்ட் 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் அன்லாக் 4.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதில் பல முக்கியமான தளர்வுகள் அமலுக்கு வருகிறது. மூன்று அன்லாக் செயல்முறையோடு லாக்டவுன் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு பகுதியில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்ட சேவைகள்

அனுமதி அளிக்கப்பட்ட சேவைகள்

  • மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது
  • சமூக நிகழ்வுகள், கூட்டங்கள், மத நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளுக்கு செப்டம்பர் 21 முதல் அனுமதி
  • 100க்கும் குறைவான நபர்கள் பங்கு பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி
எப்படி கட்டுப்பாடு

எப்படி கட்டுப்பாடு

  • சமூக கூட்டங்கள் முறையான சமூக இடைவெளியிடன் விழாக்களை நடத்த வேண்டும்
  • மாஸ்க் அணிவது கட்டாயம்
  • செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது
  • கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது
நீச்சல் குளம்

நீச்சல் குளம்

  • ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம்
  • சினிமா தியேட்டர்களுக்கான தடை நீட்டிப்பு
  • செப்டம்பர் 30 வரை சினிமா தியேட்டர்கள் செயல்படாது
  • சினிமா ஹால், நீச்சல் குளம் செயல்படாது
விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

  • சர்வதேச விமான போக்குவரத்தும் செயல்படாது
  • மத்திய அரசின் சிறப்பு விமான போக்குவரத்து சேவை தவிர வேறு சர்வதேச விமான சேவை செயல்படாது
  • கர்ப்பிணிகள், குழந்தைகள், 65 வயதுக்கு அதிகமானோர் வெளியே செல்ல தடை நீட்டிப்பு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+