இந்தியா பாகிஸ்தான் போர்? உள்ளே வந்த 3வது கண்.. அவசர அவசரமாக கூடும் UNSC.. முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை செய்ய உள்ளது . இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் அபாயம் உள்ளதால் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தை தேவைப்பட்டால் கையில் எடுக்கும் என்று அறிவித்து இருந்தது. இரண்டு நாடுகளிடம் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டால் இந்த நிலைமை குறித்து விவாதிக்கலாம் என்று மே மாதத்திற்கான கவுன்சிலின் தலைவர் எவாஞ்சலோஸ் செகெரிஸ் தெரிவித்தார்.

Jammu Kashmir

இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் சாதாரணமானது கிடையாது. இது இப்போது நடந்து கொண்டிருக்கும், வளர்ந்து வரும் ஒரு பிரச்சினை. இதை கட்டுப்படுத்த வேண்டும். அந்த பிராந்தியத்தில் இது மிக முக்கியமான விவகாரம். பிராந்திய பாதுகாப்பிற்கு இது முக்கியம்.

இந்த பஹல்காம் தாக்குதலில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அங்கே இரண்டு நாடுகள் இடையே நடக்கும் விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம், நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், நிச்சயமாக இந்த விஷயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

எந்தவொரு பயங்கரவாதச் செயலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்று மே மாதத்திற்கான கவுன்சிலின் தலைவர் எவாஞ்சலோஸ் செகெரிஸ் தெரிவித்தார்.

இன்று ஆலோசனை

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை செய்ய உள்ளது . இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் அபாயம் உள்ளதால் அவசர கூட்டம் நடைபெறுகிறது. ஐநாவின் கிளை அமைப்பான இது இரண்டாம் உலகப்போருக்கு பின் உருவாக்கப்பட்டது.

பாதுகாப்பு கவுன்சில் பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் ஐந்து பேர் நிரந்தர உறுப்பினர்கள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள். இரண்டாம் உலகப் போரின் வெற்றியாளர்களாக இருந்த பெரும் வல்லரசுகள் இவை (அல்லது அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட வாரிசு நாடுகள்). இந்தியா தற்காலிக உறுப்பினர் நாடு ஆகும்.

மோடி கிரீன் சிக்னல்

தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரத்தை உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.

இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

இரண்டு நாட்டு மோதல்

பாகிஸ்தான் பொதுவாக எல்லை கடந்த தாக்குதல்களை ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு உள்ளது.

ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. போர் இல்லாத நேரத்தில் இந்திய வரலாற்றில் இப்படி பாகிஸ்தான் சர்வதேச எல்லை கோட்டை மீறி தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை.

சர்வதேச எல்லை என்பது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சர்வதேச நாடுகள் மூலம் ஒப்புதல் பெற்ற எல்லை ஆகும். அதாவது சில எல்லை பகுதிகள் உள்நாடுகளால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். சில எல்லை பகுதிகள் எதிரி நாடுகளால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற சர்வதேச எல்லைகள் என்பது சர்வதேச கூட்டமைப்பு, உலக நாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எல்லை ஆகும்.

இங்குதான் ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இதற்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. நேற்று நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 40 நிமிடங்கள் இரண்டு பக்கமும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+