2022-ல் 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள்.. நெருப்பை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கும் பாஜக!
டெல்லி: 2022-ம் ஆண்டில் பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் பல மாநிலங்களில் கடும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியது இருப்பதால் இப்பொழுதே பாஜக தேர்தல் வியூகங்களில் களமிறங்கி இருக்கிறது.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆண்டின் இறுதியில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சிகள் தற்போது உள்ளன. ஆனால் மீண்டும் இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழ்நிலைதான் உள்ளது. கோவா, மணிப்பூரில் கொல்லைப்புறமாகத்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

உ.பி. பாஜக அரசு மீது அதிருப்தி
உத்தரப்பிரதேசத்தில் தனிக்காட்டு ராஜாவாக பாஜக இதுவரை வலம் வந்தது உண்மைதான். ஆனால் இம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாக திறமை இன்மை, பாஜகவுக்குள்ளேயே மிக மோசமான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிவிட்டது யோகி அரசு என்பதில் பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி,க்கள் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் அதிருப்தி
அதேபோல் ஜாதிய அடிப்படையிலான அதிருப்தி அலைகளும் பாஜகவுக்கு எதிராக உ.பி.யில் உள்ளது. காலந்தோறும் பிராமணர் ஒருவரை முதல்வராக்கிய பாஜக தாக்கூர் ஜாதியை சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கிய கோபமும் இருக்கிறது. இப்படி பல முனைகளிலும் பாஜகவுக்கு எதிர்ப்பு நிலவுகிறது. ஏறத்தாழ இதே நிலைமையில்தான் உத்தரகாண்ட் கள நிலவரமும் இருக்கிறது. இதனை சரிகட்டுவதற்காக இப்போதே களமிறங்கிவிட்டது பாஜக.

தேர்தல் பணி
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்த பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று உத்தரப்பிரதேசத்துக்கும் சென்ற சந்தோஷ், அங்கு கட்சி கட்டமைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நிலவரம் குறித்து தொடர்பாக மாநில அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்குடனும் சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

களத்தில் ஆர்.எஸ்.எஸ்.
இதே போல் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் ஏற்கனவே கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் சென்று ஆலோசனை நடத்தினர். அடுத்ததாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்று தேர்தல் களப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்த போதும் பாஜகவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் தொடர்பான அச்சம்தான் இப்போது முதன்மையானதாக இருக்கிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications