Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மகன் கார் ஏற்றிய லக்கிம்பூரில் பாஜக க்ளீன் ஸ்வீப்! பிற கட்சிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சிகளே ஆச்சரியப்படும் வகையில் லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவே வெற்றிபெறும் என கூறியுள்ளன.

அதனை மெய்பிக்கும் வகையிலேயே பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் பாஜக தற்போது முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே தெரிந்த முடிவுதான் என்ற கூறினாலும் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள தொகுதிகளின் நிலவரத்தை அறிய நாடே காத்திருக்கிறது.

 என்ன நடந்தது லக்கிம்பூரில்..?

என்ன நடந்தது லக்கிம்பூரில்..?

கடந்த 2021 அக்டோபர் மாதம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரும் தாக்குதலில் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த விவசாயிகள் நடத்திய பதில் தாக்குதலில் பாஜகவினர் 3 பேர் உயிரிழந்தனர். ஆக மொத்தம் 8 பேர் இந்த சம்பவம் தொடர்பாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு காரணமாக ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் ஜாமினில் வெளி வந்துள்ளார்.

 நாட்டையே உலுக்கிய நிகழ்வு

நாட்டையே உலுக்கிய நிகழ்வு

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் மகன் கார் ஏற்றி கொன்றது இந்திய அளவில் விவசாயிகளை கொதிப்படைய செய்தது. இதனால் மத்திய அரசு மற்றும் பாஜக மீது அதிருப்தியின் உச்சத்துக்கு சென்ற விவசாயிகளை சமாதானம் செய்ய, உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றிபெற.. 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப்பெற்றார் என பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

லக்கிம்பூரில் யார் யார் போட்டி

லக்கிம்பூரில் யார் யார் போட்டி

இப்படி மாதக்கணக்கில் இந்திய மக்களின் நாவில் முனுமுனுக்கப்பட்டு வந்த லக்கிம்பூர் கேரியில் தேர்தல் முடிவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இதில், லக்கிம்பூர் தொகுதியில், பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ் வெர்மா இம்முறையும் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாடி கட்சியின் வெர்மா மாதுர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சங்கர் திரிவேதி களம் கண்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

 லெக்கிம்பூரில் யார் முன்னிலை?

லெக்கிம்பூரில் யார் முன்னிலை?

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வெர்மா, சமாஜ்வாடி வேட்பாளர் மாதுரை விட 37,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இம்முறை அங்கு 65.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின்படி லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. லெக்கிம்பூரில் விவசாயிகள் பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சரின் மகனால் கார் ஏற்றிக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியும் அது தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்பதையே முடிவுகள் காட்டுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+