மொழியை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்: உபி முதல்வர் யோகி திடீர் பாய்ச்சல்
டெல்லி: இந்தி மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்; உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை கற்றுத் தரும் போது, இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத் தரக் கூடாது? என்று உத்தரப்பிரதேச முத்ல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏ.என்.ஐ.-க்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். மு.க.ஸ்டாலினுகு வாக்கு வங்கி நெருக்கடி இருக்கிறது. மொழி என்பது ஒற்றுமையை உருவாக்கத்தான் பயன்பட வேண்டும்; மொழியை வைத்து பிரிவினை செய்யக் கூடாது; இந்தியாவின் பழமையான மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்று. தமிழுக்கு நீண்ட வரலாறும் உயரிய பண்பாடும் உள்ளது.

இந்தி மொழியை ஏன் வெறுக்க வேண்டும்? ஒவ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் 3-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். மொழி என்பது ஒற்றுமைக்கானது என்பதை நமது தேசிய கீதம் வெளிப்படுத்துகிறது. மொழியின் அடிப்படையிலான பிரிவினைவாத நடவடிக்கைகள் குறித்து மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த மொழிகளை கற்றுத் தருகிறோம்.
உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளை கற்றுத் தரும்போது இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத்தரக் கூடாது? நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவான விளக்கம் தந்துள்ளார். அரசியல் லாபங்களுக்காக மாநிலங்களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்; உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவுமே இல்லையே இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பதிலடி
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்; எங்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாடம் நடத்த தேவை இல்லை என்றார்.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications