உ.பி. மகா கும்பமேளா: பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து சிக்கிய 'நிர்வாண' சாமியாருக்கு தர்ம அடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பெண்கள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோவாக படம் பிடித்த நிர்வாண சாமியார் ஒருவர் வசமாக சிக்கினார். பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்து சிக்கிய நிர்வாண சாமியாரை பொதுமக்களும் போலீசாரும் அடித்து வெளுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பலரும் மகா கும்பமேளா யாத்திரைக்கு சென்று புனித நீராடுகின்றனர்.

maha kumbh mela 2025 2025

இந்த கும்பமேளா காலத்தில் மட்டும் வெளியே வரும் பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாதுக்கள், பிரக்யாராஜில் குடில்கள் அமைத்து முகாமிட்டுள்ளனர். இந்த சாதுக்களில் பலரும் செய்து வரும் சேட்டைகளும் அத்துமீறல்களும் பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன.

அண்மையில் சாது ஒருவரிடம் யூ டியூபர் பேட்டி ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென யூ டியூபரை அந்த சாது கொடூரமாக தாக்கி விரட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல உச்சகட்ட போதையில் ஆயுதங்களுடன் சாமியார்கள் சிலர் பொதுமக்களை விரட்டுவது, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற அட்டூழியங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பெண் யாத்ரீகர்கள் உடை மாற்றும் பகுதியில் நடமாடிய நிர்வாண சாதுவின் செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் பெண்கள் உடை மாற்றுவதை அந்த நிர்வாண சாமியார் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் யாத்ரீகர்கள் அந்த நிர்வாண சாமியாரை அடித்தனர். மேலும் அங்கே பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடமும் புகார் தெரிவித்தனர். போலீசாரும் இந்த நிர்வாண சாதுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+