கச்சேரிக்கு போன பாடகிக்கு நடந்த கொடுமை.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எம்எல்ஏ.. மகனும் விடவில்லை
டெல்லி: 25 வயது பாடகியை, எம்எல்ஏ ஒருவரும், அவரது மகனும், உறவுக்காரரும் அடுத்தடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிஷாத் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ, விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள சம்பவங்கள் திரைப்படங்களின் வில்லன் காட்சிகளை விட பயங்கரமாக இருக்கிறது.
விஜய் மிஸ்ரா தற்போது நில ஆக்கிரமிப்பு கேஸ் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்ததாக கூறியுள்ளார் அந்த பாடகி.

கச்சேரி பாட்டு
இதுபற்றி பாடோசி மாவட்டத்தின், கோபிகஞ்ச், காவல் நிலையத்தில் பாடகி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அது 2014ம் ஆண்டு. மிஸ்ரா வீட்டில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்க என்னை அழைத்தார். நானும் கச்சேரி பாட அவர் வீட்டுக்கு சென்றேன். பாடல் நிகழ்ச்சியும் நல்லபடியாகத்தான் முடிந்தது.

வீட்டில் பலாத்காரம்
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பலாம் என்று நினைத்தபோது, வீட்டுக்குள் வைத்து விஜய் மிஸ்ரா என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். மேலும், நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. பயத்தால் உறைந்துபோனேன்.

எம்எல்ஏ மகனும் பலாத்காரம்
2015ம் ஆண்டு, மறுபடியும் வாரணாசியில் ஒரு ஹோட்டலில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார். பிறகு, அவரது மகனையும், உறவுக்காரரையும் என்னை வீட்டில் டிராப் செய்ய சொன்னார். ஆனால் அவர்கள், டிராப் செய்யும் முன்பாக அடுத்தடுத்து என்னை பலாத்காரம் செய்தனர். பிறகு வீட்டில் சென்று விட்டனர். இவ்வாறு தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பெரிய புள்ளி
நடந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்த பாடகி, விஜய் மிஸ்ராவிடம் எனது வீடியோ இருப்பதாலும், அவர் வேறு பல கேஸ்களில் சம்மந்தப்பட்ட பெரிய நபர் என்பதாலும், நடந்த கொடுமையை வெளியே சொல்ல பயந்து இருந்து விட்டேன். இப்போது அவர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இப்போது தைரியமாக வெளியே சொல்கிறேன். இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications