பணியிடங்களில் டார்ச்சர்.. ஹரியானா மோசம்.. டெல்லி படு மோசம்.. உ.பி. ரொம்ப மோசம்!
டெல்லி: பணியிடங்களில் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவு விவகாரங்களில் நாட்டிலேயே மோசமான இடத்தில் இருப்பது பாஜக ஆட்சி நடத்தி வரும் உத்தரப் பிரதேசம் தான். அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி வசம் உள்ள டெல்லி வருகிறது. 3வது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஹரியானா மாநிலம் வருகிறது.
பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறதே தவிர குறைந்தபாடில்லை. பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கூட இந்த குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை பெண்களுக்கு பணியிடத்தில் சில்மிஷம் உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 2164 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மோசமான உபி.
இந்தப் பட்டியலில் உ.பி தான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டிலிருந்து, 2018 ஜூலை வரையிலான காலகட்டத்தில் இங்கு 627 பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெறும் மாநிலமாக உ.பி. திகழ்கிறது.

டெல்லி 2வது இடம்
டெல்லி இதில் 2வது இடத்தில் இருக்கிறது. இங்கு இதுவரை 314 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இந்த ஆண்டுதான் அதிகபட்சமாக 231 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவுக்கு 3வது இடம்
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஹரியானா இதில் 3வது இடத்தில் வருகிறது. மொத்தம் 139 வழக்குகள் அங்கு பதிவாகியுள்ளன.

தமிழகத்திற்கு 7வது இடம்
இந்தப் பட்டியலில் 7வது இடத்தில் தமிழகம் வருகிறது. அங்கு 2015ல் 24 வழக்குகள், 2016ல் 38, 2017ல் 17 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இதுவரை 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 96 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளா ஓகே
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் கேரளாவும், ஆந்திராவும் உள்ளன. இரு மாநிலங்களிலும் இதுவரை தலா 29 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளி விவரத்தை மத்திய மகளிர் நலம் மற்றும் சிறார் வளர்ச்சித் துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications