திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும்.. ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்
டெல்லி: சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.

கூட்டணி கணக்கு
தற்போது ஆளும்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இந்த முறை கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இது தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஏபிபி கருத்துக்கணிப்பு
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஏபிபி- சிவோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைக்கும்
இதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 43% வாக்குகளுடன் திமுக 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 206ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 39% வாக்குகளுடன் 98 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

அதிமுக நிலை என்ன
அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி 30.6% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர கட்சிகள் நிலை என்ன
அதேபோல இந்த முறை மற்ற கட்சிகள் குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கமல் ஹாசின் மக்கள் நீதி மய்யம் 2-6 (7% வாக்கு) தொகுதிகள் வரையும், டிடிவி தினகரனின் அமமுக 1-5(6.4% வாக்கு) தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இதர கட்சிகள் 12.3% வாக்குகளுடன் 3-7 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!











Click it and Unblock the Notifications