ஒரே பாலின திருமண விவகாரம்- நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: ஒரே பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆணித்தரமாக வாதிட்டது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் நேற்று முதல் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலினத்தவர் திருமணம் என்பதும் அதற்கு அங்கீகாரம் கோருவதும் என்பதும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கமாக இருப்பவர்களின் பார்வையும் கோரிக்கையும். இது சமூகத்தின் இதர பிரிவுகளிடையே பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும். இத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் தருவது சமூக சமநிலையை பாதிக்கும்.
மேலும் இத்தகைய திருமணங்களுக்காக அங்கீகாரம் வழங்குதல் என்பது நாடாளுமன்றத்துக்கான அதிகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இத்தகைய மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என்பதையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசு தமது பதில் மனுவில் தெரிவித்தது. இப்பதில் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, ஒரு பாலின திருமண விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என மத்திய அரசு தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications