திருந்தாத பாகிஸ்தான்! ஆபரேஷன் சிந்தூர் மட்டுமில்ல.. இதுவரை இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதற்கு முன்பாக இதுபோல நடத்தப்பட்ட தாக்குதல்களின் விவரங்களை பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்திற்கு இடையே இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறும் என உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பாகிஸ்தான் ராணுவம் கண்களில் மண்ணை தூவிய இந்திய ராணுவம், இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்தது.

9 இடங்களில் தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவு 1.44 மணிக்கு இந்த தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் என 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.
70 பயங்கரவாதிகள் பலி?
ராணுவ தளங்கள் எதையும் அட்டாக் செய்யாமல் பயங்கராவத முகாம்களை மட்டுமே தாக்கியுள்ளது இந்திய ராணுவம். இந்தியாவின் இந்த மாஸ்டர் ஸ்டிரோக் நடவடிக்கையில், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டு இருக்கும் இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து திருந்தாமல் மீண்டும் மீண்டும் அத்து மீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016:
* கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ராணுவம் இந்த சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது
* 2016 செப்டம்பர் 18 ஆம் தேதி இந்திய ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
* இதனால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டது. இதையடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது.
* எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
* இந்த தாக்குதலில் 40 - 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தவில்லை என்று பாகிஸ்தான் சாக்குபோக்கு சொல்லி சமாளித்தது
பலாகோட் விமானப்படை தாக்குதல் 2019:
* கடந்த 2019 ஆ,ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
* பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.
* இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள பலாகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்தியா அட்டாக் செய்தது.
* இந்த தாக்குதலில், பெரிய எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
* இந்தியா நடத்திய இந்த சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 27 ஆம் தேதி வான்படை தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. அப்போது இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பிடித்தது. பின்னர் பேச்ச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் விடுவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் 2025
* பலாகோட் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளியுள்ளது.
* பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட 15 நாட்களில் இந்தியா நேற்று நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களில் ஏவுகணை தாக்குதலை நடத்தி பதிலடியை கொடுத்துள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications