டிரம்பால் இந்தியாவுக்கு புது சிக்கல்! வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்காவால் தலைவலி.. ஷாக் பின்னணி
டெல்லி: அண்டை நாடான வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் நாடு புகுந்து கைது செய்துள்ளது. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தியை வெனிசுலா மேற்கொண்டு வருவதோடு நம் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இப்படியான சூழலில் தான் வெனிசுலாவில் நடக்கும் பிரச்சனை நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வெனிசுலா விவகாரம் நம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா - வெனிசுலா இடையேயான மோதல் இன்று உச்சக்கட்டத்தை எட்டியது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்கும் சட்டவிரோதமாக வெனிசுலாவை சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்ய உதவினால் வழங்கப்படும் பரிசுத்தொகையை ரூ.438 கோடியா டிரம்ப் உயர்த்தி அறிவித்தார். கடந்த சில வாரங்களாக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில் தான் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
அதன்படி வெனிசுலாவின் நேரப்படி நள்ளிரவில் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் அடிப்படையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. 7 இடங்களில் குண்டுகளை வீசிய அமெரிக்க விமானப்படை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கிளியா ஃபுரோரஸை சிறை பிடித்துள்ளது.
இந்நிலையில் தான் வெனிசுலா - அமெரிக்கா இடையேயான விவகாரம் கச்சா எண்ணெயில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வெனிசுலா தான் உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அரபு நாடான சவுதி அரேபியாவை காட்டிலும் இங்கு தான் தினமும் அதிக கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் வர்த்தகம் தான் முதலிடத்தில் உள்ளது.
தற்போது வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இதனால் வெனிசுலாவில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இதனால் தற்போது வரை பாதிப்பு இல்லை.
இருப்பினும் அமெரிக்கா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து வரி போட்டு வருகிறது. அதோடு வெனிசுலாவின எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்து வருகிறது. தற்போது அதிபர் நிகோலஸ் மதுரோ கைதால் அமெரிக்காவின் ஆட்டம் வெனிசுலாவில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பட்சத்தில் உலகளவில் கச்சா எண்ணெய் மீதான விலைகள் உயர வாய்ப்புள்ளது. த அதுமட்டுமின்றி இந்தியாவும், சீனாவும் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தடைகளால் 2020ம் ஆண்டு வரை வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து இருந்தது.அதன்பிறகு எழுச்சி கண்டது. வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2021ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5.5 லட்சம் முதல் 6.3 லட்சம் பேரல்கள் என்ற அளவில் இருந்தது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி முறையே 217 மில்லியன் மற்றும் 264 மில்லியன் பேரல்களாக அதிகரித்தது 2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 315 மில்லியன் பேரல்களை எட்டியது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 8.5 லட்சம் பேரல்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 1.14 மில்லியன் பேரல்களாக வெனிசுலா உயர்த்தியது.
மேலும் வெனிசுலாவை எடுத்து கொண்டால் அது நம் நாட்டுக்கம், சீனாவுக்கும் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. நம் நாட்டை ஒப்பிடும்போது சீனாவுக்கு தான் அதிகளவில் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் செல்லுகிறது. இதனால் தற்போதைய விவகாரம் இந்தியா, சீனா என இரண்டு நாடுகளையும் பாதிக்கலாம். நம் நாட்டை எடுத்து கொண்டால் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
வெனிசுலாவுடன் நம் நாடு கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தான் அதிகம் செய்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் வெனிசுலாவில் கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளவில் நம் நாடு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொண்டது. அதன்படி 2021-22 நிதியாண்டில் வெனிசுலாவில் இருந்து நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 89 மில்லியன் டாலராக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்தது. 2022-23 நிதியாண்டில் 250 மில்லியன் டாலராகவும் இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா-வெனிசுலா கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் புத்துயிர் பெற்றது. வெனிசுலாவிடம் இருந்து நம் நாடு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.
இந்திய வணிக உளவுத்துறை மற்றும் புள்ளியியல் இயக்குநரகம், ஐக்கிய நாடுகள் COMTRADE தரவுத்தளத் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவிடம் இருந்து நம் நாட்டின் சராசரி எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 63,000 முதல் 100,000 பேரல்கள் வரை அதிகரித்தது. இது முந்தைய ஆண்டை விட 500% அதிகமாகும். கடந்த ஆண்டும் இதே நிலை நீடித்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் அழுத்தியதால் நம் நாடு வெனிசுலா நோக்கி திரும்பியது.
சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) புள்ளி விவரத்தின்படி 2025ம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வெனிசுலாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 3வது இடத்தில் நம் நாடு தான் இருந்தது. இருப்பினும் ரஷ்யாவை ஒப்பிடும்போது வெனிசுலாவிடம் நாம் குறைவாக தான் வாங்குகிறோம். ஆனாலும் நம் நாட்டுக்கு தற்போது வெனிசுலாவின் கச்சா எண்ணெயும் முக்கியம். இதனால் இதனால் வெனிசுலாவிடம் நடக்கும் பிரச்சனை என்பது நம் நாட்டுடனான கச்சா எண்ணெய் வர்த்கத்தில் பெரிய அளவில் பாதிப்பை தரும். அதோடு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications