டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாடு.. அப்செட் ஆன ஜோ பைடன்.. காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை தருகிறார். உலக தலைவர்கள் பலரும் வருகை தர உள்ளதால் டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, சீன அதிபர் பங்கேற்க மாட்டார் என்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
வளர்ந்த நாடுகள் பலவற்றை உள்ளடக்கிய ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு இந்த முறை இந்தியா தலைமை தாங்குகிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லியில் வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.
டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் செப்டம்பர் 7ம் தேதி அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகிறார்.
4 நாட்கள் இந்தியாவில் ஜோ பைடன் தங்க உள்ளார். ஜோ பைடன் டெல்லியில் உள்ள பிரபலமான ஐடிசி மவுரியா, ஓட்டலில் தங்க உள்ளார். ஜோ பைடன் மற்றும் அவருடன் வரும் அதிகாரிகள் குழு, பாதுகாப்பு குழு ஆகியோர் தங்குவதற்காக மொத்தம் 400 அறைகள் ஐடிசி மவுரியாவில் புக் செய்யப்பட்டுள்ளது. ஜி 20 மாநாடு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இந்தியா வருகை தரும் ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ஜோ பைடன் பங்கேற்க மாட்டார் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
எனினும், அவரை நான் சந்திக்க இருக்கிறேன்" என்றார். எனினும், ஜின்பிங்கை வேறு எந்த இடத்தில் சந்திக்க போகிறேன் என்ற தகவலை ஜோ பைடன் கூறவில்லை. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் செல்ல இருக்கிறார். அதன்பிறகு சீன அதிபரை சந்திக்கும் திட்டம் எதுவும் வைத்துள்ளாரா? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications