அமெரிக்காவில் ஒரே நாளில் 96,375 பேருக்கு கொரோனா தொற்று- இந்தோனேசியா, பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு!
டெல்லி: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 96,735 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தோனேசியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் மிக அதிக அளவில் உள்ளன.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,79,64,387. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 42,23,257. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,88,81,698.
தற்போதைய நிலையில் அமெரிக்காதான் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,375. மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 411 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,55,89,036. அமெரிக்காவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,28,517. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,96,26,754.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஒருநாள் பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 44,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,15,71,295. இந்தியாவில் நேற்று 549 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,23,244. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 42,119 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,07,36,241. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,11,810.
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று பாதிப்பும் மரணங்களும் படுவேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தோனேசியாவில் நேற்று 43,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவால் 1,893 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் இந்தோனேசியாவில்தான் அதிக பேர் நேற்று உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 90,552. இந்தோனேசியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்- அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,54,484.
அதேபோல் பிரேசிலிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலில் நேற்று 41,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,39,369. பிரேசிலில் நேற்று மட்டும் 1,354 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். பிரேசிலில் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,54,626 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,14,752.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 20,772 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் நேற்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அடுத்ததாக மகாராஷ்டிராவில் 6,600 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மகாரஷ்டிராவில் நாட்டிலேயே அதிகமாக நேற்று மட்டும் 231 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் நேற்று 2,068 பேருக்கும் தமிழகத்தில் 1947 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் 1890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கர்நாடகாவில் 34 பேரும் தமிழகத்தில் 27 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். ஒடிஷாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒடிஷாவில் நேற்று மட்டும் 1,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இம்மாநிலத்தில் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்க அதிகமாக உள்ளது. கேரளாவில் தற்போதைய நிலையில் 1,60,821 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 77,494. கர்நாடகாவில் 23,478 பேரும் தமிழகத்தில் 20,934, ஆந்திராவில் 21,198 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிஷா மாநிலத்தில் 14,874 பேரும் மேற்கு வங்கத்தில் 11,171 பேரும் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அஸ்ஸாமில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 12,485.
மணிப்பூரில் தற்போது 10,735 பேர், மிசோரமில் 11,284 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications