டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியுடன், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் டெல்லியில் சந்திப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் அரசு முறை இந்தியா வந்தார். பிடன் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வரும் முதல் அமெரிக்க அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆவார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளி, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் இருந்து வருகின்றனர்.

US Secretary of Defense Lloyd Austin meets with Prime Minister Modi in Delhi

ஜோ பைடன் பதவியேற்றது முதல் பல்வேறு பதவிகளில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் அரசு முறை இந்தியா வந்தார். டெல்லி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிடன் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வரும் முதல் அமெரிக்க அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆவார். லாயிட் ஆஸ்டின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், அஜீத் தோவலை சந்தித்து பேசினார். மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார்.

இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, சீனா அச்சுறுத்தல் கொடுக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் விவாதித்ததாக கூறப்டுகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரிடம் அதிபர் ஜோ பிடனிடம் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். உலக நன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது கூட்டாண்மையை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
US Secretary of Defense Lloyd Austin arrives in India on a three-day official visit. Lloyd Austin is the first US Secretary of State to visit India since Biden took office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X