முதுகில் குத்திய டிரம்ப்! 50% வரியால் இந்தியாவுக்கு எத்தனை லட்சம் கோடி இழப்பு தெரியுமா? ஷாக் டேட்டா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பின் காரணமாக நம் நாட்டுக்கு மொத்தம் 3.15 லட்சம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் என்பது பற்றிய முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடாவடியாக வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டையும் டிரம்ப் விட்டு வைக்கவில்லை. அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார்.
முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக இன்று முதல் 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது விதித்த 50 சதவீத வரி முழுவதுமாக அமலாகி உள்ளது.

இந்தியாவுக்கு எவ்வளவு இழப்பு?
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெருமளவில் சரிவை சந்திக்க உள்ளது. இது நம் நாட்டில் தொழில் துறையை பாதிப்பதோடு, வேலையிழப்பையும் ஏற்படுத்தும். இதனால் டிரம்ப் மீது பிரதமர் மோடி கடும் கோபத்தில் உள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் நம் நாட்டுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக Global Trade Research சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:
ரூ.3.15 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்காவுக்கு கடந்த 2025ம் நிதியாண்டில் இந்தியா 86.5 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 7.58 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி டிரம்பின் 50 சதவீத வரியால் நடப்பு நிதியாண்டில் சரிய உள்ளது.
அதன்படி அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 49.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.34 லட்சம் கோடி )அளவுக்கு சரியும். அதாவது கடந்த 2025 நிதியாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 43 சதவீதம் வரை சரியும். இதன்மூலம் இந்தியாவுக்கு 3.15 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
வேலையிழப்பு
அதுமட்டுமின்றி நம் நாட்டின் பல தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, ஏராளமானவர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இதற்கு முக்கிய காரணம். நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 66 சதவீத பொருட்களுக்கு டிரம்பின் 50 சதவீத வரி பொருந்தும்.
இதனால் டிரம்பின் வரி விதிப்பு என்பது நம் நாட்டை நேரடியாக பாதிக்க உள்ள அதேவேளையில், நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 30 சதவீத பொருட்களுக்கு வரி இல்லாத நிலை தொடர்கிறது.இதன்மூலம் நம் நாட்டுக்கு 27.6 பில்லியன் வருவாய் கிடைக்கும்.
எந்தெந்த தொழில்களுக்கு பாதிப்பு?
டொனால்ட் டிரம்பின் இந்த வரியால் நம் நாட்டில் ஜவுளித்துறை, இறால், தோல், ரத்தினம், தங்க நகைகள் உள்பட பல தொழில்கள் பாதிக்கப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டின் திருப்பூர், குஜராத்தின் சூரத் மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த துறைகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்படும். நம் நாட்டின் பொருட்கள் செல்லாத நிலையில் வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், துருக்கி, நேபாளம் மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகள் தங்களின் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு அனுப்பி பலன் பெறலாம்.
மாற்று மார்க்கெட் என்ன?
இதனால் அமெரிக்காவுக்கு மாற்றாக மாற்று மார்க்கெட்டை இந்தியா உடனடியாக கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி முதற்கட்டமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications