டிரம்புக்கு குட்பை.. 40 நாடுகளுக்கு பறக்கும் ஜவுளி! இந்தியா அதிரடி முடிவு.. தப்பும் திருப்பூர்?
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சரிய உள்ளது. குறிப்பாக ஜவுளி துறை அதிக பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்காவை நம்பி இனி பயனில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள மத்திய அரசு பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 40 நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதனால் திருப்பூர் தப்பிக்கும் வாய்ப்புள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் சரிய உள்ளது. இது நம் நாட்டு நிறுவனங்களில் வருவாதைய பாதிப்பதோடு, வேலையிழப்பையும் ஏற்படுத்துகிறது.

இதனால் அமெரிக்காவுக்கு பதில் மாற்று மார்க்கெட்டை தேட வேண்டிய கட்டாயம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் நம் நாட்டில் பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஒன்று ஜவுளி.
ஜவுளி ஏற்றுமதி எவ்வளவு?
கடந்த 2024-25ம் நிதியாண்டில் நம்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத்துறை மூலம் 179 பில்லியன் டாலருக்கு (ரூ.15.6 லட்சம் கோடி) வருமானம் வந்தது. இதில் உள்நாட்டு சந்தை மூலமாக 142 பில்லியன் டாலரும் (ரூ.11.8 லட்சம் கோடி), ஏற்றுமதி மூலமாக 37 பில்லியன் டாலர் (ரூ.3.07 லட்சம் கோடி) வருமானமும் கிடைத்தது.
அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக ஜவுளி ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடம் பிடித்தது. நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகப்படியான ஜவுளிகள் ஏற்றுமதியானது. குறிப்பாக கடந்த 2024-25 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 10.94 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியானது. இந்திய மதிப்பில் கூற வேண்டும் என்றால் ரூ.95,964 கோடியாகும். தற்போதைய டிரம்பின் வரி விதிப்பால் ஜவுளி துறையின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில் தான் ஜவுளி துறையை ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவால் ஏற்படும் ஏற்றுமதியை இழப்பை சரிகட்ட 40 நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மிகவும் முக்கியமானவையாகும்.
இதுதொடர்பாக ஒவ்வொரு நாடுகளிடம் அங்குள்ள தூதரகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் சார்பில் தீவிரமாக பேச்சுவர்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நம் நாடு 220க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்க பிளான்
இருப்பினும் பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளில் பல்வேறு நாட்டு மக்கள் வசிக்கின்றனர். பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி மத்திய அரசின் கையில் இருக்கும் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள 40 நாடுகள் ஆண்டுதோறும் 590 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஜவுளி மற்றும் ஆடைகளை இறக்குமதி செய்கின்றன. இதில் இந்தியாவின் ஏற்றுமதி என்பது 5 முதல் 6 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
தப்பிக்கும் திருப்பூர்?
இதனால் இந்த நாடுகளை முதற்கட்டமாக தேர்வு செய்து மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் தேவையை பொறுத்து ஜவுளிகள் ஏற்றுமதியாக உள்ளது. திருப்பூர், சூரத், பானிபட், பதோகி உள்ளிட்ட இடங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை நம்பி தொழில் நிறுவனங்கள், பணியாளர்கள் உள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் ஜவுளிகள் 40 நாடுகளுக்கும் கூடுதலாக ஏற்றுமதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications