"இந்திய ஐடி துறையை AI அச்சுறுத்தும்.. ஆனால் அழிக்காது.." ரகுராம் ராஜன் சொன்ன மிக முக்கிய தகவல்
டெல்லி: ஏஐ காரணமாக இந்தியாவில் ஐடி சர்வீஸ் செக்டார் மிகப் பெரிய அழிவைச் சந்திக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ வளர்ச்சியால் இந்திய ஐடி சர்வீஸ துறை ஆபத்தை எதிர்கொள்ளும் என்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இருப்பினும், அது ஐடி துறையை அழிக்காது மாறாக மொத்தமாக மாற்றி அமைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
AI வந்த பிறகு கடந்த சில காலமாகவே இந்திய ஐடி துறை ஆட்டம் கண்டுள்ளது. இந்திய ஐடி சர்வீஸ் துறையை ஏஐ மொத்தமாகக் காலி செய்யும் எனப் பல்வேறு ஆய்வுகள் வெளியாகி வருகிறது. இதனால் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது.

ரகுராம் ராஜன்
இதற்கிடையே இந்திய ஐடி சர்வீஸ துறை ஏஐ வளர்ச்சியால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், மற்றவர்களைப் போல இந்திய ஐடி சந்தை முழுமையாக அழியும் என்று ரகுராம் ராஜன் நினைக்கவில்லை. AI ஒரு உடனடி அச்சுறுத்தல் அல்ல என்றும் அதற்கேற்ப நாம் தகவமைத்துக் கொண்டால் போதும் என்றும் ரகுராம் ராஜன் புளூம்பெர்க் டிவிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்திய சர்வீஸ் செக்டாருக்கு அச்சுறுத்தல் தான். ஆனால், இந்த சர்வீஸ் செக்டார் சாப்ட்வேர் தவிர்த்துப் பிற துறைகளிலும் தொடரும். ஆனால், AI ஒரு சவால் தான். மாற்றங்கள் நடக்கச் சற்று நேரம் நேரம் எடுக்கும். தொழில்நுட்ப அறிவு இல்லாத நிறுவனங்கள் அதற்கு மேலும் நேரம் எடுத்துக் கொள்ளும். அவ்வளவுதான்
புதிய தேவைகள்
இந்திய ஐடி நிறுவனங்களும் ஐடி துறை ஊழியர்களும் விரைவாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். AI புதிய தேவைகளை உருவாக்கும். அதற்கேற்பப் பயிற்சி (reskilling) மிகவும் அவசியம். இதுதான் அழிவு இதைத் தாண்டி மேலே வரவே முடியாது என்ற ஒரு சூழலை ஏஐ உருவாக்காது. இதுபோன்ற கவலைகள் அடிப்படை அற்றவை.!
ஏஐ வளர்ச்சியால் அந்த ஆபத்து இந்த ஆபத்து எனச் சொல்லும் ரிப்போர்ட்களை நம்பி, அதுதான் நடக்கும் என நினைக்க வேண்டாம். தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் மட்டுமே அதை வேகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதைத் தாண்டி வெளியே வேறு துறைகளில் இருப்போர் அதை பயன்படுத்த அதிகக் காலம் எடுத்துக் கொள்வார்கள்.
அதிகரிக்கவில்லை
நிஜ உலகில் AI பயன்பாடு அவ்வளவு ஒன்றும் வேகமாக அதிகரித்துவிடவில்லை. பல வெளிநாட்டு நிறுவனங்களே கூட இன்னும் பெரியளவில் அல்லது முழு வீச்சில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. எனவே, இந்தியாவுக்கு டைம் இருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்குத் தங்களைத் தாங்களே மறுசீரமைக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவை இந்தியாவில் தங்கள் குளோபல் கேபபிலிட்டி சென்டர்களை விரிவுபடுத்தி, வேறு டிஜிட்டல் பணிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளலாம்.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வீஸ் துறையில் இந்தியாவை நோக்கி வர செலவுகள் குறைவு என்பதே காரணம். மிகச் சிறந்த தொழில்நுட்ப ஊழியர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஆகும் செலவில் 5ல் ஒரு பங்கில் இந்திய ஊழியர்கள் கிடைக்கிறார்கள். இது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்டு. இத்தோடு ஏஐ கருவிகளும் சேர்ப்பது இந்தியாவின் பலத்தை அதிகரிக்கவே செய்யும். இந்திய நிறுவனங்கள் ஏஐ காலத்திலும் ஐடி துறைக்குப் பொருத்தமானதாகவே இருக்கும்!
இந்தியா என்ன செய்ய வேண்டும்
ஐடி சர்வீஸ் துறைகளைத் தாண்டி உற்பத்தித் துறையிலும் AI முக்கிய பங்கு வகிக்கும். ரோபாட்டிக்ஸ் துறையில் முன்னேற்றங்கள் ஏற்படுகிறது. இது உற்பத்தியை மாற்றி அமைக்கிறது.. எனவே, விலையுயர்ந்த செமிகண்டக்டர் திட்டங்களுக்கு மானியம் வழங்குவதை விட, பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற மனித வளங்களில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியா அதிக நன்மைகளைப் பெறும். இவை கொள்கை முன்னுரிமைகள் பிரதிபலிக்க வேண்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications