பிரதமர் காட்டிற்கு சென்ற பகுதி! 'மோடி சர்க்யூட்' ஆகும் மேன் vs வைல்டு எபிசோட்.. கலக்கல் திட்டம்!
டெல்லி: இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் ஒவ்வொரு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
சுற்றுலாத் துறையைப் பெரிதும் நம்பி இருக்கும் மாநிலங்களில் முதன்மையானது உத்தரகண்ட். இதனிடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்த உத்தரகண்ட் புதியதொரு திட்டத்தை முன்னெடுத்து உள்ளது.
இதன் மூலம் மாநிலத்தின் சுற்றுலாவை குறிப்பிட்ட அளவுக்கு மேம்படுத்த முடியும் என உத்தரகண்ட் அரசு நம்புகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

உத்தரகண்ட் அரசு
உத்தரகண்ட் அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த மா பகவதி, சிவன், விஷ்ணு, நவ்-கிரா, கோல்ஜு மகாராஜ், நாக்தேவ்தா, ஹனுமான் மற்றும் விவேகானந்தர் சுற்றுலா சுற்றுகளை இப்போது உருவாக்கி வருகிறது. அடுத்தகட்டமாக "மோடி சர்க்யூட்டை" உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மோடி சர்க்யூட்டில் எந்தெந்த பகுதிகளைக் கவர் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய இறுதிக்கட்ட பணிகள் அங்கு இப்போது நடைபெற்று வருகிறது.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான மேன் vs வைல்ட் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பார். அந்த எபிசோட் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் பார்க்கில் தான் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. அதில் புலிகள் அடர்ந்து இருக்கும் பகுதியில் கோசி ஆற்றை தற்காலிக தெப்பம் மூலம் இருவரும் கடந்தனர். மேலும், பிரதமர் வேப்ப இலைகளால் செய்யப்பட்ட பானத்தையும் குடித்து இருப்பார். இந்த எபிசோட் பயங்கரமான ஹிட் அடித்தது.

சுற்றுலா தளம்
அப்போதே இந்த இடம் வருங்காலத்தில் பெரிய சுற்றுலா இடமாக மாற வாய்ப்புள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே அந்த எபிசோட்டில் மோடி சென்ற இடங்களை வைத்துத் தான் மோடி சர்க்யூட்டை உத்தரகண்ட் அரசு உருவாக்குகிறது. வீடியோவை வைத்து அவை எந்தெந்த பகுதிகள் என்பதை அதிகாரிகள் கண்டறியத் தொடங்கி உள்ளனர். மோடி சென்ற இடங்களை வைத்து உருவாக்கப்படும் மோடி சர்க்யூட்டை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இது தொடர்பாக உத்தரகண்ட் சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மகராஜ் கூறுகையில், "நான் குரோஷியா சென்ற போது, கேம் ஆப் த்ரோன்ஸ் சர்க்யூட்டை பார்த்தேன். கேம் ஆப் த்ரோன்ஸ் படம் பிடிக்கப்பட்ட இடங்களைக் கொண்டு அந்த சர்க்யூட்டை உருவாக்கி இருந்தனர். அப்போது தான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. இந்த சர்க்யூட் மூலம் பிரதமர் மோடி சென்ற இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளாலும் செல்ல முடியும்" என்றார்.

40 கிலோமீட்டர்
உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் கர்னல் அஷ்வினி பண்டிர் கூறுகையில், "அந்த நிகழ்ச்சியை நான் முழுவதும் பார்த்து உள்ளேன். அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடங்களைக் கண்டறியத் தொடங்கிவிட்டனர். பிரதமர் தெப்பத்தில் ஆற்றைக் கடந்தது உள்ளிட்டவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுபவிக்கும் வகையில் இதைத் திட்டமிட்டு வருகிறோம். சுமார் 30-40 கிலோமீட்டர் பரப்பளவில் நாங்கள் இதைத் திட்டமிடுகிறோம். வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் வகையில் இது இருக்கும்" என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications