இன்னும் ஒரு வருஷமில்லைங்க.. 10 ஆண்டுகளுக்கு கொரோனா நம்மை விட்டு போகாதாம்.. நிபுணர்கள் ஷாக் தகவல்
டெல்லி: தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸானது இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம்முடனே இருக்கும் என பயோ என்டெக் நிறுவனத்தின் மூத்த தலைவரும் பைசர் தடுப்பு மருந்தின் முன்னணி ஆராய்ச்சியாளருமான உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த உலகில் பிறந்தது. சீனாவில் பிறந்த அந்த குட்டி வைரஸ் அப்படியே உலகமெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டார்கள். இந்த கொடிய வைரஸை ஒழிக்க உலக நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வருகிறார்கள்.

கோவிஷீல்டு
அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. அதில் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த வைரஸானது அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் நம்முடன் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பயோ என் டெக்
இதுகுறித்து பைசர் தடுப்பு மருந்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும் பயோ என் டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான உகுர் சாஹின் கூறுகையில் இந்த கொரோனா வைரஸ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நம்முடன் தங்கியிருக்கும். உண்மையை சொல்ல போனால் கொரோனாவால் பாதிப்புகள் அதிகரிக்கும்.

கொரோனா பாதிப்பு
இந்த உலகிற்கு இயல்பு நிலை என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு மேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் உலக மக்கள்தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர் வரை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வாமை
அமெரிக்க நிறுவனமான பைசர் ஜெர்மனியின் பயோ என் டெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. சில சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்திய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications