Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் அப்படியே சரிந்த பாலம்.. அலறல் கூட கேட்கல.. பிழைத்தவர்கள் பகிர்ந்த ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்று பாலம் இடந்து விழுந்ததில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

"என் மகன் மூழ்கிவிட்டான், என் கணவன் மூழக்கிக்கொண்டிருக்கிறார்... காப்பாற்றுங்கள்" புதன்கிழமை அதிகாலை முஜ்பூர்-கம்பீராவ் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து வந்த முதல் குரல் இதுதான். ஆற்றில் விழுந்த வாகனத்தின் மேல், மார்பளவு தண்ணீரில் நின்றுக்கொண்டு உதவிகேட்டு கதறிய ஒரு பெண்ணின் குரல்தான் இது.

Vadodara bridge Gujarat

மொத்த குடும்பமும் பலி

இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் காரில் கோயிலுக்கு பயணித்திருக்கிறார். போகிற வழியில்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. காரில் இரண்டு குழந்தைகள் இருந்திருக்கின்றன. இந்த விபத்தில் இந்த பெண்ணை தவிர, அவரது கணவர், மகன், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட வாகனத்தில் இருந்த மற்ற அனைவரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தப்பியது எப்படி?

விபத்து குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் காலை 7 மணியளவில் தரியபுராவிலிருந்து பாக்டானாவுக்கு (சௌராஷ்டிரா) குரு பூர்ணிமா யாத்திரைக்காகப் புறப்பட்டோம். அப்போது ஒரு சில பைக்குகளும், ஒரு லாரியும் எங்கள் அருகே இருந்தன. திடீரென்று பாலம் இடிந்து விழுந்தது. சில நொடிகளில் நாங்கள் கீழே விழுந்தோம். என்ன நடந்தது என்று நாங்கள் உணரும் முன்பே, வாகனம் தண்ணீரில் விழுந்து ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

கண்முன்னே கணவரும், குழந்தையும் பலி

என் குடும்பத்தினரைக் காப்பாற்றும்படி உதவி கேட்டுக் கொண்டிருந்தேன்... நான் மட்டுமே வாகனத்தின் பின்புறத்தில் இருந்ததால் வெளியே வந்தேன். என் கணவர், மகன், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் வாகனத்தில் இருந்தனர். அது தலைகீழாக விழுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

உதவ யாரும் வரவில்லை

யாரும் எனக்கு உதவ வரவில்லை. என் குடும்பம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தது. ஆற்றில் கார் விழுந்தால் யார் உயிர்பிழைப்பார்கள்? எங்கள் குடும்பத்தில் என் பேரன்தான் சிறியவன். அவனுக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. போலீசாரும் மீட்புக் குழுவினரும் படகுடன் வந்த பிறகு நான் வெளியே வந்தேன். என் குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என கண்ணீருடன் கூறியுள்ளார்.

நேற்றிரவு 7.30 மணி நிலவரப்படி, அதாவது விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கு பின்னர், விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

Vadodara bridge Gujarat

உள்ளூர் மக்களின் உதவி

இந்த விபத்தில் உயிர் பிழைத்த மற்றொரு நபரான திலிப்சின் கூறுகையில், "போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது. நான் பாலத்தில் 100 மீட்டர் தூரம் கூட கடக்கவில்லை, அப்போது ஒரு அதிர்வு ஏற்பட்டது. திடீரென்று பாலம் உடைந்துவிட்டது. நான் ஆற்றில் விழுந்தேன். எனக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், நான் மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு உலோக கம்பியைப் பிடித்துக் கொண்டேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. யாராவது வந்து காப்பாற்றும் வரை, நீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். உள்ளூர் மீனவர்கள்தான் படகுகளுடன் முதலில் வந்தார்கள்" என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் செய்த நற்செயல்

இந்த விபத்தில் உயிர் பிழைத்த மூன்றாவது நபர் ஹாதியா. துவாரகாவைச் சேர்ந்த ராஜு டோடா ஹாதியா என்பவர் பிக்-அப் வேனில் அங்கலேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரும் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தார். "என் வாகனத்தில் இரண்டு பேர் இருந்தோம். துவாரகாவிலிருந்து அங்கலேஷ்வர் சென்று கொண்டிருந்தோம். என் உதவியாளர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. பிக்-அப் வேன் அப்படியே தண்ணீரில் விழுந்தது. நான் வெளியே வந்து வாகனத்தின் மேல் உட்கார்ந்தேன். பிறகு யாரோ வந்து என்னை படகில் காப்பாற்றினார்கள்" என்று கூறியுள்ளார்.

நூலிழையில் தப்பிய நபர்கள்

அன்வர் முகமது என்பவரும் இந்த விபத்தில் உயிர் பிழைத்திருக்கிறார். போர்சாட்டைச் சேர்ந்த அன்வர், இரண்டு பேருடன் வேனில் பாரூச் மாவட்டத்தில் உள்ள ஜம்புசருக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். "நாங்கள் பாலத்தைக் கடக்கும்போது, ஒரு பகுதி உடைந்து விழும் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் மூவரும் வேனில் இருந்து குதித்து ஓடினோம். சீட்டு கட்டு போல பாலம் சரிந்து, எங்கள் வேன் ஆற்றில் விழுந்ததைப் பார்த்தோம். இன்னும் சில மீட்டர் தூரம் நாங்கள் சென்று இருந்தால் எங்கள் வேன் பாதுகாப்பாக இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+