முத்தலாக் மசோதா தாக்கல்- வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள்: ராஜ்யசபாவில் சீறிய வைகோ
Recommended Video
டெல்லி: ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீறினார்.
லோக்சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு படுதீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

இன்று காலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர், இந்த நாள் வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் என்றார். உடனே வைகோ ஆவேசமாக குறுக்கிட்டார்.
மேலும், இந்த நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என பதிலடி கொடுத்தார். வைகோவின் ஆவேசத்தைப் பார்த்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, மூத்த உறுப்பினராகிய வைகோ, நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதாவை நிறைவேற்ற தமது கூட்டணி கட்சிகள் சிலவற்றை வெளிநடப்பு செய்ய வைக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது.
கருப்பு சால்வை வேண்டும்...
முன்னதா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்.பி ராசிரியர் மனோஜ்குமார் ஜா தலைவர் வைகோவை சந்தித்தார். அப்போது, மிஸ்டர் வைகோ, எனக்கும் ஒரு கருப்பு சால்வை வேண்டும். I have to fight. உங்களைப் போல் நானும் போராட வேண்டும் என்றார்.
அதற்கு வைகோ, கண்டிப்பாகக் கொண்டு வந்து தருகிறேன். என் அன்புச் சகோதரர் லாலு பிரசாத் உடல் நலம் குன்றி இருப்பது எனக்கு வேதனை அளிக்கின்றது. அவரது நலன் விழைவதைக் கூறவும் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications