வந்தே பாரத் விமானம்.. ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்டால் தராதீங்க.. மத்திய அரசு அறிவுரை
டெல்லி: வந்தே பாரத் விமானங்களில் டிக்கெட் பதிவு செய்ய இடைத்தரகர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இன்று வரை தொடங்கப்படவில்லை. வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு 'வந்தே பாரத் ' திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த மே 6ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் வாயிலாக பல லட்சம் இந்தியர்கள் தாய் நாடு திரும்பி உள்ளனர்.
இன்னும் ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் இருக்கிறார்கள். இவர்கள் நாடு திரும்ப தொடர்ந்து அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்களை அறிவித்து வருகிறது. இந்த விமானங்களில் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், "வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களுக்கான டிராவல் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டை பதிவு செய்யும் பயணிகள் ஏர் இந்தியா விமானத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தினால் போதும். கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
டிராவல் ஏஜெண்டுகள் கூடுதல் கட்டணம் கேட்பதாக தெரிந்தால் பயணிகள் gmsm@airindia என்ற இணையதள முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications