Vande Bharat: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஓடப்போகும் ரூட் எது? எப்போது முதல்.. பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்
டெல்லி: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தான் பயன்பாட்டு வரும் என பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டே இருந்த நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இந்த ரூட்டில் தான் ஓடப்போகிறது. எத்தனை கி.மீ ஸ்பீடில் இந்த ரயில் செல்லும் என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகம், சொகுசு உள்ளிட்ட காரணங்களால் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கை வசதி கொண்ட ரயில்களாகவே உள்ளன. இந்த ரயில்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரயில்
உதாரணத்திற்கு, சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பகல் நேரத்தில் மட்டுமே செல்கிறது. இதே ரூட்டில் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இரவு நேரத்தில் செல்கின்றன. சுமார் 600 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த ரூட்டில் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் பயணிக்க பயணிகள் விரும்புவார்கள்.
ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள்
ஏனெனில் சராசரியாக 10 மணி நேரம் வரை ஆகும் என்பதால், படுக்கை வசதி கொண்ட ரயில்களில் செல்லவே பயணிகள் விரும்புகிறார்கள். வந்தே பாரத் ரயில்களில் முழுவதும் ஏசி வசதி, நவீன சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள் என பயணத்தை அனுபவித்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது.
சோதனை ஓட்டம் வெற்றி
இதையடுத்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டே தயாரிப்பு பணிகள் முடிந்து சென்னை ஐசிஎப் ஆலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. ஆனாலும் இந்த ரயில் சேவை தொடங்குவதில் இன்னமும் தாமதம் ஆகிக்கொண்டே வருகிறது.
இந்த ரூட்டில் தான் ஓடப்போகுது
ரயில்களின் வடிவமைப்பில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ரயில்வே பாதுகாப்புக் குழு கண்டறிந்தது. இதை சரி செய்த பிறகு இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்பட்டது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தொலைதூரங்களுக்கும் இரவு நேர சேவையாகவும் இயக்கப்படும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் புதுடெல்லி - லக்னோ ரூட்டில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த இலக்கை தோராயமாக 8 மணி நேரத்தில் கடக்கும் என்று சொல்லப்படுகிறது.
160 கிமீ வேகத்தில் செல்லும்
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லும். இரவில் ஏறினால் அதிகாலையில் பயண இலக்கை எட்டும் அளவுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. விரைவில் அறிமுகமாக இருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரூட்டில் சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், வரும் புத்தாண்டுக்கு முன்பாக ரயில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications