கடலில் களமிறங்கிய "சூப்பர்" ராட்சசர்கள்.. வெனிசுலாவில் இருந்து இந்தியா வரும் கச்சா எண்ணெய்!
டெல்லி: அமெரிக்காவின் கண்ட்ரோலில் வெனிசுலா வந்த பிறகு, அந்நாட்டில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதற்கிடையே 3 மிகப் பெரிய சரக்கு கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டு இருக்கிறதாம். பல இந்திய நிறுவனங்கள் வெனிசுலா கச்சா எண்ணெய்யை வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் வெனிசுலாவில் இறங்கிய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்தது. அதன் பிறகு வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் என டிரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வெனிசுலா மீது போடப்பட்ட பல்வேறு வர்த்தகத் தடைகளையும் டிரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இந்தியா- வெனிசுலா
இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெனிசுலா- அமெரிக்கா டீலை தொடர்ந்து, இந்த வர்த்தகம் தொடங்கியுள்ளது. இப்போது சுமார் 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யைச் சுமந்து செல்லும் பெரிய டேங்கர்கள் இந்தியக் கடற்கரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய VLCC எனப்படும் மிகப் பெரிய கச்சா எண்ணெய்க் கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்றும் ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..
மிக பெரியவை
சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ராட்சச கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் VLCC உள்ளே வந்துள்ளது, வெனிசுலா ஏற்றுமதி மீண்டுள்ளதையே காட்டுகிறது. இவை சூயஸ்மாக்ஸ் (Suezmax) ரகக் கப்பல்களைக் காட்டிலும் சுமார் இரு மடங்கும், ஆஃப்ரேமாக்ஸ் (Aframaxes) ரக கப்பல்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக கொள்ளளவைக் கொண்டுள்ளன. இதனால் சரக்கை எடுத்துச் செல்ல ஆகும் செலவுகளும் குறையும், ஏற்றுமதியும் வேகமடையும்.
விட்டால் (Vitol) மற்றும் ட்ரஃபிகுரா (Trafigura) ஆகிய நிறுவனங்கள் நிஸ்ஸோஸ் கீயா, நிஸ்ஸோஸ் கைத்னோஸ், அர்சானா ஆகிய மூன்று VLCCகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அவை மூன்றுமே இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. அதேபோல ஒலிம்பிக் லயன் என்ற மற்றொரு பெரிய எண்ணெய்க் கப்பலும் வெனிசுலாவை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
செலவுகள் குறையும்
இப்படிப் பெரியளவிலான சரக்கு கப்பல்களைப் பயன்படுத்துவதால் போக்குவரத்துச் செலவுகள் குறையும்.. மேலும், விநியோகச் சங்கிலியும் வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகம் வேகம் பெற்றுள்ளதால் வெனிசுலாவின் சேமிப்புக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் பல லட்சம் கணக்கான பேரல் கச்சா எண்ணெய் மார்கெட்டிற்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இந்த வளர்ச்சி ஒரு முக்கிய தருணமாக அமைகிறது. 2019ல் தான் வெனிசுலா உடன் வர்த்தகம் செய்ய அமெரிக்கா தடைகளை விதித்தது. அதற்கு முன்பு, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களில் 3வது பெரிய நாடாக இந்தியா இருந்தது. இந்தச் சூழலில் இப்போது அமெரிக்கா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்பதால், மீண்டும் இந்தியா வெனிசுலா வர்த்தகம் உயரும்!
இந்திய நிறுவனங்கள்
சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஷெவ்ரான் நிறுவனம் வெனிசுலா கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. அதேபோல விட்டல் நிறுவனத்திடமிருந்தும் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் வாங்குகிறது. இது தவிர PDVSAவிடம் இருந்து நேரடியாக வாங்குவதையும் ரிலையன்ஸ் ஆராய்ந்து வருகின்றது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹெச்பி எனர்ஜி போன்ற நிறுவனங்களுக்கும் வெனிசுலா கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பரவலாக்குகிறது. ரஷ்யாவைச் சார்ந்து இருப்பதையும் குறைக்கிறது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்திய நிறுவனங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெய் தள்ளுபடி விலைக்கே விற்கப்படுகிறது
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications