கெஜ்ரிவால் கைதில் யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.. உலக நாடுகளுக்கு ஜகதீப் தன்கர் பதிலடி
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், "சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய கருத்தும் இந்தியாவுக்கு தேவையில்லை" என குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தடாலடியாக பதிலளித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை குறி வைத்திருக்கிறது. ஆனால் இத்தனை தொகுதிகளை வெல்வதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. சூழல் இப்படி இருக்கையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன.

கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர்தான் கைது செய்யப்பட்டார். ஆனால், கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும்போதே அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இந்திய வரலாற்றில் முதலமைச்சர் யாரும் இதற்கு முன்னர் இப்படி கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலிருந்தும் விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதாவது, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், "அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல ஜெர்மனியும், "நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்" என்று கூறியிருந்தது.
சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் இந்தியாவுக்கு தலைவலியை கிளப்பியுள்ள நிலையில், தற்போது ஐநாவும் கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவை சூசகமாக விமர்சித்துள்ளது. அதாவது, "இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சூழலில், மக்களின் 'அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்' பாதுகாக்கப்படும் எனவும், அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம்" என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் கருத்துகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, "வலுவான நீதித்துறை கொண்ட ஒரே நாடு இந்தியாதான். நீதித்துறையில் தனிநபரோ, குழுவோ பாதிப்பை ஏற்படுத்த முடியாது. எனவே சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய பாடமும் இந்தியாவுக்கு தேவையில்லை" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். மேலும், "சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதான் பதிய விதி" என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனத்தின் 70வது ஆண்டு விழா டெல்லியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜகதீப் தன்கர் நேற்று பங்கேற்றிருந்தார். அப்போதுதான் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications