கோல்டு செயினா இருக்குமோ!.. ஆசையாக கிஃப்டை பிரித்த மணமகள்.. பார்த்தவுடன் கோபம்.. வைரலாகும் வீடியோ
டெல்லி: மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப் பொருளை பிரித்து பார்த்ததும் கோபமான மணப்பெண் அதை தூக்கி எறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மைக்காலமாக திருமணங்களில் மணமகன், மணமகளின் நண்பர்கள் அவர்களுக்கு சர்பிரைஸ் கிப்ட்களை அளித்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் விலைவுயர்வின் போது பெட்ரோல் கேனை அளித்தனர்.
வெங்காய விலை உயர்ந்த போது மணமகனுக்கு வெங்காய மாலைகளை அணிவித்தனர். மேலும் கொரோனா நேரத்தில் மாஸ்க்குகளையும் சானிடைசர்களையும் பரிசாக கொடுத்ததையும் பார்த்துள்ளோம்.

விலையேற்றம்
அது போல் சிலிண்டர் விலையேற்றத்தின் போது சிலிண்டரையும் நம்மாட்கள் பரிசாக கொடுத்ததை யாரும் மறக்கவில்லை. இது போல் ஒவ்வொரு முறையும் திருமண நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் கொடுத்து வரும் பரிசு பொருட்கள் சமூக அவலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளன.

ஸ்டைல்
அது போல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஸ்டைலாக போஸ் கொடுக்க தெரியாததால் மணமகளை வைத்து டெமோ காண்பிக்கும் போட்டோகிராபர்களை பார்த்து கடுப்பாகும் மணமகன்கள் குறித்த வீடியோக்களும் வைரலாகி சிரிப்பை வரவழைத்தன.

கோபம்
அந்த வகையில் வடமாநிலத்தவரின் திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு பொருளை பார்த்து கோபமடைந்த மணப்பெண் அந்த பொருளை தூக்கிபோடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அப்படி அந்த மணப்பெண்ணுக்கு என்னதான் கிப்ட் கொடுத்தார்கள்?

என்ன கிப்ட்
மணமகளுக்கு கிப்ட் கொடுத்த நண்பர்கள் உடனடியாக அதை பிரிக்க சொல்கிறார்கள். ஆர்வத்துடன் பிரித்த பார்த்த மணமகள் அதை பார்த்தவுடன் கடுப்பாகிவிடுகிறார். அப்படி மணமகள் கோபமடைய என்ன காரணம் என்றால் நண்பர்கள் கிப்ட்டாக கொடுத்தது குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டிலை கொடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications