‘பிரிஜ் பூஷணை அம்பலப்படுத்துவோம்’.. வினேஷ் போகத் சவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததையடுத்து பாஜகவின் பிரிஜ் பூஷண் சரண் சிங் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரிஜ் பூஷண் தவறானவர் என்பதை அம்பலப்படுத்துவோம் என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். உடல் எடை அதிகரித்ததால், அவர் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஒட்டு மொத்த நாடும் அதிருப்தியையும், சோகத்தையும் தெரிவித்து வினேஷுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பாஜக ஆதரவாளர்கள் மட்டும் அவரை குறை சொல்வதிலேயே குறியாக இருந்தனர்.

vinesh phogat brij bhushan

பாஜக மூத்தத் தலைவரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை புகார் வைத்தனர். இதில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்தாண்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தேசியளவில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்தப் போராட்டத்தை மனதில் வைத்து, பாஜகவினர் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை அப்போது முதலே விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தின் நட்சத்திர மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கியுள்ளது.

முக்கியமாக பிரிஜ் பூஷண் சரண் சிங், "மல்யுத்த வீரர்களின் முதல் நாள் போராட்டத்தின்போதே, இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று நான் சொல்லியிருந்தேன். அது ஒரு நாடகம். அதை பின்னால் இருந்து காங்கிரஸ் இயக்கியுள்ளது. ஒரு மல்யுத்த வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனை செய்ய முடியுமா என்று வினேஷ் போகத்தை கேட்க விரும்புகிறேன்.. ஏமாற்றி தான் அங்கு சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்கான வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றீர்கள். அதற்கான தண்டனையும் கடவுள் உங்களுக்கு வழங்கிவிட்டார்." என்று கூறியிருந்தார்.

இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பில் இருந்து பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஜூலானா பேரைவத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் வினேஷ் போகத். பிரிஜ் பூஷண் பேசியது குறித்து வினேஷ் போகத் கூறியுள்ளதாவது: பிரிஜ் பூஷண் கூறியதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். பெண்கள் தன் மீது குற்றம் சுமத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறியிருந்தார். ஆனால், பல பெண்கள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நான் ஏமாற்றிதான் ஒலிம்பிக் சென்றதாகக் கூறுகிறார்.

நான் தேசிய அளவிலான போட்டிகளில் போட்டியிட விரும்பவில்லை. இருப்பினும், தேசிய அளவிலும் பல்வேறு சோதனைப் போட்டிகளிலும் போட்டியிட்டுதான் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றேன். என் தகுதியையும் திறமையையும் வைத்துதான் சென்றேன். எங்களுக்கான வாய்ப்பு வரும்போதெல்லாம் பிரிஜ் பூஷண் தவறானவர் என்பதை அம்பலப்படுத்துவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+