நல்ல பாம்பின் உயிரை காப்பாற்ற, உயிரை துச்சமென மதித்து இளைஞர்கள் செய்த பகீர் காரியம்!
டெல்லி: நல்ல பாம்பின் உயிரை காப்பாற்ற, உயிரை துச்சமென மதித்து இளைஞர்கள் கிணற்றில் செய்த காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் அதிகம் உள்ள நாகப்பாம்பு(நல்ல பாம்பு) என்றால் நிச்சயம் பலருக்கும் அச்சம் தரும்.
நல்ல பாம்பு குளம் , ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அது அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும். அப்போது பாம்புகளிடம் சிக்கினால் சிக்கல் தான்.

குதித்த இளைஞர்கள்
இந்நிலையில் கிணற்றில் நல்ல பாம்பு ஒன்று வெளியேற முடியாமல் நீந்தியபடி இருந்தது. அதை கண்ட இளைஞர் ஒருவர் உயிரை பற்றி கவலைப்படாமல் பாம்பை தண்ணீரின் கரையோரத்திற்கு அழைத்து சென்றனர்.

கொத்த முயற்சி
பின்னர் ஒருவர் கிணற்றில் ஒரத்திற்கு வந்த பாம்பை அப்படியே அலேக்காக தூக்குகிறார். அப்போது பாம்பு அவரை கொத்துவதற்கு அடுத்தடுத்து முயற்சிக்கிறது. அதை பொருட்படுத்தாமல் பாம்பை காப்பாற்றும் பொருட்டு அதை கையில் லாவகமாக பிடித்த படி நிற்கிறார்.

உயிருடன் மீட்பு
இன்னொரு இளைஞர், இன்னும் கொஞ்ச தூரம் கிணற்றில் இறங்கி, பாம்பின் வால் பகுதியை வாங்குகிறார். அவரை பாம்பு கொத்த முயற்சிக்கிறது. ஆனால் அவர் லாவகமாக மேலே உள்ள தன் நண்பரிடம் பாம்பை ஒப்படைக்கிறார். அவர் பாம்பை வாங்கி குச்சியில் மடக்கி பிடித்தார். நல்ல பாம்பை நான்கு இளைஞர்கள் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு காட்டில் விட்டனர்.
|
அரிதானது
இளைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தைரியமாக கிணற்றில் குதித்து பாம்பை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பை பிடித்த இளைஞர்களின் வீடியோவை டெல்லியைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி நவீத் திரும்பூ வெளியிட்டு பாராட்டி உள்ளார், அவர் தனது பதிவில் நீரில் மூழ்காமல் ஒரு நாகத்தை காப்பாற்ற, இளைஞர் கிணற்றில் குதித்துள்ளார். பாம்பை காப்பாற்ற இப்படி ஒருவர் உயிரை பணயம் வைப்பது அரிது. மிகவும் போற்றத்தக்கது என்று கூறியுள்ளார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications