பாசம்.. விஸ்வாசம்.. உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல பாஸ்.. இதோ மற்றுமொரு உதாரணம்!
டெல்லி: தனது எஜமானனான பள்ளி மாணவியின் பள்ளி பையை பேருந்து வரை எடுத்துச் சென்று கொடுத்த நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மனிதர்களுக்கு விஸ்வாசமான விலங்குகளில் முதன்மையானவை நாய்கள் தான். தங்களுடைய எஜமானர்களுக்காக நாய்கள் எந்த எல்லைக்கும் சென்று உதவி செய்யும். இதற்கு பல உதாரணக் கதைகள் இருக்கின்றன.

தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ நாய்களின் விஸ்வாசத்தை மெச்சும் மற்றொரு கதையாக அமைந்திருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பள்ளி வேன் சாலையில் நிற்கிறது. அதன் வாசலில் ஒரு நாய் நின்று ஓட்டுனரை பார்த்து குரைக்கிறது.
உள்ளே இருந்து ஒரு சிறுமி வருகிறாள். அவளது கையில் இருக்கும் பையை அந்த நாய் வாங்கிக்கொண்டு, ஓட்டுனருக்கு 'டாட்டா பைபை' சொல்லிவிட்டு கிளம்புகிறது. சிறுமியும் அந்த நாயுடன் சேர்ந்து நகர்கிறாள்.
We don't deserve dogs 😭😭❤️❤️ pic.twitter.com/Asn0huinWf
— The Feel Good Page ❤️ (@akkitwts) October 31, 2020
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நாயின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். விஸ்வாசத்தில் நாயை மிஞ்ச வேறு எந்த விலங்கும் இல்லை என புகழ் மாலைகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications