Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேச தூதரகம் டெல்லியில் முற்றுகை.. விஸ்வ ஹிந்து அமைப்பினர் - போலீஸ் தளளுமுள்ளு - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் எரித்து கொல்லப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த திபு சந்திர தாஸின் கொலையை கண்டித்து டெல்லியில் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத் உள்பட பிற இந்து அமைப்பினர் அந்த நாட்டின் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், இந்து அமைப்பினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

vishva-hindu-parishad-and-other-hindu-organisation-protest-near-the-bangladesh-high-commission-in-de

தற்போது வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. பிப்ரவரி மாதம் 12ம் தேதி அங்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

தலைநகர் டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) என்ற மாணவர் தலைவர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார். ‛இன்கிலாப் மஞ்சா' என்ற மாணவர் போராட்டக் குழுவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை முன்னின்றி வழிநடத்தியவர்களில் ஒருவர். இநு்நிலையில் தான் முகமூடி அணிந்த நபர் பிரசாரத்தின்போது அவரை சுட்டு கொன்றார். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

பத்திரிகை அலுவலகங்கள், இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது கல்வீசப்பட்டது. மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்தவர் தீபு சந்திர தாஸ் (30) என்ற இந்து இளைஞர் எரித்த கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலைக்கு பின்னணியில் இந்தியா உள்ளதாகவும், வங்கதேச வன்முறைக்கு இந்தியா தான் காரணம் என்று சிலர் பேசி வருகின்றனர். இதனால் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் வங்கதேசத்தை கண்டித்து நம் நாட்டில் போராட்டம் தொடங்கி உள்ளது. டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட இந்து அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வங்கதேச தூதரகத்தை நோக்கி சென்றனர்.

வங்கதேச தூதரகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே போலீசார் சாலையின் நடுவே தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து அமைப்பினர் கடும் கோபமடைந்தனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீசாரின் இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டி அவர்கள் முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+