கொரோனா 4வது அலை..எச்சரித்த கான்பூர் ஐஐடி.. "மதிப்புமிக்க உள்ளீடு" .. ஒப்புக் கொள்ளும் நிதி அயோக்..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஜூன் 22ஆம் தேதி முதல் கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் என கான்பூர் ஐஐடி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ள நிலையில், கான்பூர் ஐஐடி ஆய்வானது புகழ்பெற்ற நபர்களால் உருவாக்கப்பட்ட "மதிப்புமிக்க உள்ளீடு" எனவும், அரசாங்கம் அத்தகைய ஆய்வுகளை உரிய மரியாதையுடன் பார்ப்பதாக நிதி அயோக் உறுப்பினர் விகே பால் கூறியுள்ளார்.

சீனாவின் வூகான் மாகணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவிபெரும் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர்

கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, கொரோனா டெல்டா வகையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. அடுத்த டெல்டா ப்ளஸ், ஓமிக்ரான், ஸ்ட்லெத் ஓமிக்ரான் என அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர். கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அவர்களின் கணிப்புகள், குறிப்பாக மூன்றாவது அலையைப் பற்றிய கணிப்புகள் துல்லியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் ஐஐடி

கான்பூர் ஐஐடி

ஐஐடி கான்பூரின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையின் சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை ஜூன் 22 முதல் தொடங்கி, ஆகஸ்ட் 23 அன்று அதன் உச்சத்தை அடைந்து அக்டோபர் 24 இல் முடிவடைகிறது," என்று அவர்கள் தெரிவித்தனர். கொரோனாவின் நான்காவது அலையின் உச்சத்தின் இடைவெளியைக் கணக்கிடுவதற்கு "பூட்ஸ்ட்ராப்" எனப்படும் ஒரு முறையைக் குழு பயன்படுத்தியது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற நபர்கள்

புகழ்பெற்ற நபர்கள்

கான்பூர் ஐஐடி ஆய்வானது புகழ்பெற்ற நபர்களால் உருவாக்கப்பட்ட "மதிப்புமிக்க உள்ளீடு" எனவும், அரசாங்கம் அத்தகைய ஆய்வுகளை உரிய மரியாதையுடன் பார்ப்பதாக நிதி அயோக் உறுப்பினர் விகே பால் கூறியுள்ளார். அரசாங்கம் அத்தகைய ஆய்வுகளை உரிய மரியாதையுடன் பார்ப்பதாகவும் ஆனால் இந்த குறிப்பிட்ட அறிக்கைக்கு அறிவியல் மதிப்பு உள்ளதா இல்லையா என்பதை இன்னும் ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய NITI ஆயோக் உறுப்பினர் விகே பால், தொற்றுநோய் பற்றிய அறிவியல், அதன் தொற்றுநோயியல், போக்கு மற்றும் வைராலஜி ஆகியவற்றைப் பார்ப்பது எங்களின் முயற்சியாகும் என்றார்.

உரிய மரியாதை

உரிய மரியாதை

எல்லா கணிப்புகளும் தரவு மற்றும் அனுமானங்களின் அடிப்படையிலானவை மற்றும் அவ்வப்போது வேறுபட்ட மதிப்பீடுகளைப் பார்த்தோம் என்ற பால், அவை சில சமயங்களில் மிகவும் மாறுபட்ட முடிவுகளை எடுக்கின்றன. ஒரு சில கணிப்புகளின் அடிப்படையில் சமூகத்திற்கு மிகவும் பாதுகாப்பற்றதாக இருக்கும். அரசாங்கம் இந்த மதிப்பீடுகளை உரிய மரியாதையுடன் பார்க்கிறது, ஏனெனில் இவை புகழ்பெற்ற நபர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் படைப்புகள் என்றும், அரசாங்கத்தின் அணுகுமுறை கணிக்க முடியாத வைரஸுக்கு முற்றிலும் தயாராக உள்ளது, ஆனால் ஐஐடி ஆய்வுக்கு அறிவியல் மதிப்பு உள்ளதா இல்லையா என்பது இன்னும் ஆராயப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+