ஜி 20 மாநாட்டை புறக்கணித்த விளாடிமிர் புடின்.. இந்தியாவுடன் உறவை முறிக்கிறதா ரஷ்யா? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவில்லை. அவரின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது

2023 G20 உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் (ICapanvent International Exhibition) நடைபெற உள்ளது. இது G20 (Group of Twenty) உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு இதுவாகும்.

Vladimir Putin boycotted the G20 conference: Is Russia breaking ties with India? whats going on?

ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ரஷ்யா வரவில்லை: இந்த மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவில்லை. அவரின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்தியாவும் ரஷ்யாவும் பனிப்போர் கால நண்பர்கள். பல உலக விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த நாடுகள் இரண்டும்.

1971 இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியாவை அமெரிக்கா மிரட்டிய போது இந்தியாவிற்கு உறுதுணையாக படைகளை அனுப்பியது ரஷ்யாதான். வங்காள விரிகுடாவிற்கு இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியதை அடுத்து, சோவியத் யூனியன் டெல்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நாசகார போர் கப்பல்களை பதிலுக்கு அனுப்பி நம்மை காத்தது.

அதேபோல் இந்தியா தனது பாதுகாப்பு ஆயுதங்கள், தளவாடங்களுக்கு ரஷ்யாவை நம்பித்தான் உள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவை பாதுகாக்கவும் ரஷ்யாவின் உறவு அவசியமாக உள்ளது. இதற்கு பதிலுக்கு, 1979 இல் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பை பாதுகாத்த ஒரே தெற்காசிய நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியா மீது அணு ஆயுத சோதனைக்கு பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அப்போது நமக்கு உதவியது ரஸ்யா மட்டுமே. முக்கியமாக விண்வெளி உபகரணங்கள், கிரையோஜெனிக் எஞ்சின் போன்றவற்றை வழங்கியது ரஷ்யா மட்டுமே ஆகும். இப்போது ரஷ்யா போரிலும் கூட மேற்கு நாடுகள் எல்லாம் பிரஷர் கொடுத்தும் கூட ரஷ்யாவை இந்தியா கண்டிக்கவில்லை.

அதோடு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியையும் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டது. இதெல்லாம் ரஷ்யாவுடன் - இந்தியா நெருக்கமாக இருந்ததற்கான ஆதாரங்கள். ஆனால் இத்தனை இருந்தும் கூட, டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவில்லை. அவரின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதை பலரும் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவில் விரிசல் என்று கூறுகிறார்கள். ஆனால் ரஷ்யாவுடன் இந்தியா இரண்டும் இப்போதைக்கு பிரிந்து செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் இது கண்டிப்பாக விரிசலை ஏற்படுத்தும். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் சரிவையே இது காட்டுகிறது.

ரஷ்யாவின் இந்த முடிவு காரணமாக இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு உலகம் பக்கம் நெருக்கி செல்கிறதோ, ரஷ்யாவுடனான உறவை முறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் அதே சமயம் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இதில் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக காணப்பட்டது. இதனால் கூட உடனடியாக இன்னொரு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜி 20 மாநாட்டை புடின் புறக்கணித்து இருக்கலாம்.

பிரிக்ஸ்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் இந்த முறை நேரடியாக தென்னாப்பிரிக்காவில் நடந்தது

இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் சிரில் ராமபோசா இன்று பிரிக்ஸ் கூட்டத்திற்கு பின் உரையாற்றினார். இன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை அறிவிக்கும் போது புதிய உறுப்பினர் நாடுகளின் பெயர்களை அறிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியா மாறும்: எண்ணெய் வள நாடுகள் இந்த குழுவில் இணைவது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு. உதவும் அதேபோல் பாகிஸ்தான் இதில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவும் இந்தியாவிற்கு சாதகமாக மாறி உள்ளது.

தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிற்கும் இது சாதகமாக முடியும்.

கரன்சி: இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.

இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.

எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும். முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி: இதில் தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவும் அதிர்ச்சில் உள்ளது. .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+