பெரும் சர்ச்சை..! நிர்மலா சீதாராமனுக்கு தடை விதிக்கணும்.. அமெரிக்காவில் வெளியான பரபர விளம்பரம்
டெல்லி: அமெரிக்காவின் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் பங்குச் சந்தையின் தலைமையிடமாக உள்ளது வால் ஸ்ட்ரீட். உலகின் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் இங்கு தான் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
அமெரிக்க பங்கு சந்தை தொடர்பான தகவல்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் வெளியிடும். அங்கு வெளியாகும் முக்கியமான செய்தித்தாளாக இது கருதப்படுகிறது.

சர்ச்சை விளம்பரம்
இதற்கிடையே அந்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழலில் வெளியான விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்டவர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது. தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் வழக்கு தொடர்பாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நியாயமற்ற விசாரணை
இந்த விளம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்ல இருந்த நிலையில், சரியாக அப்போது இந்த விளம்பரம் வெளியாகி உள்ளது. தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் வழக்கு தொடர்பாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. தேவாஸ் நிறுவனத்தின் ஓனர் ராமச்சந்திர விஸ்வநாதன் தன் மீது நியாயமற்ற விசாரணையை இந்தியா நடத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.

11 பேருக்கு தடை விதிக்கணும்
நியாயமற்ற விசாரணையால் அவரை குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களைக் கைப்பற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் ராமச்சந்திர விஸ்வநாதன், இதனால் 11 இந்திய உயர் அதிகாரிகள் மீது "மேக்னிட்ஸ்கி சட்டம்" கீழ் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் மனு அளித்து இருந்தார். இந்த ராமச்சந்திர விஸ்வநாதன் இப்போது அமெரிக்கக் குடிமகனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும் தாக்கு
இந்த விளம்பரம் இந்தியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. டெல்லியில் உள்ள ஒரு மூத்த அரசு அதிகாரி, இந்த விளம்பரம் இந்தியாவையும் அதன் நிர்வாகத்தையும் நேரடியாகக் குறிவைத்துத் தாக்கியுள்ளது என்றார். இது தொடர்பாக ஐடி துறை மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, "இது மோடி அரசுக்கு எதிரான விளம்பரம் மட்டுமல்ல. இது நமது நாட்டின் நீதித்துறையைச் சீரழிக்கும் முயற்சி.

கீழ்த்தரமான நடவடிக்கை
மோசக்காரர்கள் அமெரிக்க ஊடகங்களை ஆயுதமாக்குவது வெட்கக்கேடானது. இந்த விளம்பரத்தை வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அனுமதித்து இருக்கக் கூடாது. இது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி விஸ்வநாதன் இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

என்ன வழக்கு
பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியாவிற்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கும் இடையே 2005இல் சாட்டிலைட் இயக்க போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்ரோ 1.3 பில்லியன் டாலரை தேவாஸ் மல்டிமீடியாவுக்கு வழங்க வேண்டும் என்று சர்வதேச வர்த்தக சம்மேளனம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ரேட் நோட்டீஸ்
இதையடுத்து தேவாஸ் கணக்குகளை முடக்கப்பட்டது. மேலும், இன்டர்போலிடம் விஸ்வநாதனைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ரேட் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவரை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்தது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications