வக்பு வாரிய மசோதா- எதிர்க்கட்சிகளின் 572 திருத்தங்களையும் நிராகரித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இம்மசோதாவில் திருத்தம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் வழங்கிய 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வழங்கிய 14 பரிந்துரைகளை மட்டும் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கக் கூடிய வகையில், வக்பு சொத்துகள் அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டுக் குழுவில் திமுகவின் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.

waqf bill bjp india bloc

நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது ஏப்ரல் மாதம் வரை ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வருடம் மௌனி அமாவாசை ஜனவரி 29 ஆம் தேதி வருகிறது. மௌனி அமாவாசை (Mauni Amavasai) இந்து மதத்தில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. மௌனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் செய்யப்படும் தானம் ஆகியவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மௌனி அமாவாசைக்காக மகா கும்ப விழாவில் அதிகளவில் மக்கள் புனித நீராடி செல்வார்கள். இந்தநிலையில், பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசிக்கான விமானக் கட்டணம் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+