உச்சத்தில் போர் பதற்றம்! பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்கள் இருளில் மூழ்கின.. உச்ச கட்ட பாதுகாப்பு!
டெல்லி: இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாநிலங்கள் முழுவதும் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. பஹல்காமில் உயிரிழந்தவர்களின் கண்ணீரை துடைப்பதற்காகவே இந்த தாக்குதல் என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்திய இந்தியா தங்கள் தரப்பு நியாயத்தை உலக நாடுகளிடம் எடுத்து கூறியது. இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பின. எனினும் இந்தியாவின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைப் பகுதியில் வாலாட்டி வந்தது.
எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. எல்லை மீறிய இந்த தாக்குதல் நேரம் ஆக ஆக அதிகரித்தது. இந்தியாவும் அதற்கு தக்க பதிலடி கொடுத்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் தாக்குதலை அதிகரித்து வந்தது. இதற்கிடையே இன்று மதியம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
உச்சக்கட்ட பதற்றம்
பதற்றமான சூழலை தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காக எல்லை மீறி தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8 மணியளவில் இருந்து பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 8க்கும் மேற்பட்ட விமானங்களை இந்தியா இடைமறித்து அழித்துள்ளது.
இதனால் மேலும் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவமும் இடைமறித்து அழித்து வருகின்றன. இதனால் எல்லை மாநிலங்களில் உச்சக்கட்ட பதற்றம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய மாநிலங்கள்
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாநிலங்கள் முழுவதும் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதேபோல் அம்மாநிலங்களில் உச்சக் கட்ட பதற்றம் நிலவுவதாக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் - டெல்லி இடையேயான ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்களும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். அடாவடி செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முடியறித்து வருவதால் அச்சத்தில் உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications