மல்லிகார்ஜூன கார்கேவை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, சோனியா காந்தி குடும்பத்தினர் அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. கேரளா வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த போது மல்லிகார்ஜூன கார்கேவை அறைக்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டது சோனியா காந்தி குடும்பம் என்கிறது பாஜக.

கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பிரியங்கா காந்தி போட்டியிடும் முதல் தேர்தல் இது.

wayanad by election 2024 priyanka gandhi mallikarjun kharge

வயநாட்டில் நேற்று பிரியங்கா காந்தி தமது குடும்பத்தினருடன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்த போது, அதிகாரியின் அறைக்குள் சோனியா காந்தி குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்; காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவரான மல்லிகரஜூன கார்கே அறைக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுன் வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. மேலும், சோனியா குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்தால் அவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போலதான் சோனியா குடும்பம் பயன்படுத்துமா? எனவும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இது குறித்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. அதேநேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் அறையில் பிரியங்கா அருகே மல்லிகார்ஜூன கார்கே அமர்ந்திருக்கும் படங்களும் வெளியாகி இருக்கின்றன.

வேட்பு மனுத் முன்னதாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, நான் 17 வயதில் என் தந்தை ராஜீவ் காந்திக்காக பிரசாரம் செய்தேன். என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி, அம்மா சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி ஆகியோருக்காக 35 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன்.இந்த முறைதான் நான் எனக்காக முதல் முறையாக தேர்தல் பிரசாரம் செய்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

wayanad by election 2024 priyanka gandhi mallikarjun kharge

வயநாடு தொகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டகாயம் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த போது அந்த மக்கள் அனைத்தையும் இழந்து நின்றிருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நிலையிலும் துணிச்சலுடன் நின்றிருந்தனர். வயநாடு தொகுதியின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதப்படுகிறேன். ஆனால் ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்களோ, வெறுப்பையே விதைக்கின்றனர்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு லோக்சபா தொகுதியில் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கக் கூடிய அதிகாரப்பூர்வமான எம்பியாக பிரியங்கா காந்தி இருப்பார். அதேநேரத்தில் வயநாடு தொகுதிக்காக குரல் கொடுக்கும் மற்றொரு எம்பியாகவும் நான் இருப்பேன். உங்கள் தொகுதிக்கு இந்த இரு எம்பிகளுமே குரல் கொடுப்போம் என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், பிரியங்கா காந்தி மிக வலிமையான ஒரு தலைவர். வயநாடு லோக்சபா தொகுதி மக்கள், பிரியங்கா காந்தி மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+