நிதிஷ் விலகிவிடுவார் என முன்பே தெரியும்.. அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா? போட்டு உடைத்த காங்கிரஸ்
டெல்லி: பீகாரில் மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறிய நிலையில், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என்று தங்களுக்கு முன்பே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளையும் வென்றது. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். பாஜகவை விட குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதன்படி முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் உள்ளனர். இந்தக் கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக பீகாரில் நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் அளித்தார். நிதிஷ் குமாரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். பாஜக ஆதரவுடன் இன்று மாலை மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த நிதிஷ் குமாரே அந்தக் கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனிடையே, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேசியபோது, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக சொன்னார்கள்.
இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதால் நாங்கள் எதையும் சொல்லவில்லை. தற்போது அந்த தகவல் உண்மையாகியிருக்கிறது" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications