நாம் நரகத்தை நோக்கி செல்கிறோம்.. ஜாக்கிரதை! டெல்லி கட்டிட இடிப்பு.. ப. சிதம்பரம் கடும் எச்சரிக்கை!
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாஜகவை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ‛‛சட்டத்தின் ஆட்சி என்பது ஒவ்வொரு நாளும் உடைந்து போவதை நாம் காண்கிறோம். விரைவில் சட்டமும் இல்லை. விதிகளும் இல்லை என்ற நிலை வரும். தன்னிச்சை உத்தரவு மூலம் சட்டத்தை மீறுவது என்பது நரகத்துக்கான பாதையை காட்டுகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்பு மக்களுக்கும் இடையே மோதல் உருவானது. இது வன்முறையாக மாறியது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று காலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.

ஆக்கிரமிப்பு அகற்றம்
டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் 14 குழுக்களாக வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் 9 புல்டோசர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின்போது 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இடிந்து விழும் வீடு, கடைகளை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

உத்தரவை மீறி அகற்றம்
இதற்கிடையே தான் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் அதற்கான உத்தரவு நகல் வரவில்லை எனக்கூறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. இதையடுத்து 2 மணிநேரம் கழித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்த செயலுக்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். வடக்கு டெல்லி மாநகராட்சியை பாஜக அதிகாரத்தில் இருப்பதால் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் ஏழை முஸ்லிம் மக்களின் வீடு, கடைகளை இடித்து அகற்றுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

சிதம்பரம் விமர்சனம்
இந்நிலையில் டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் 2 டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ப சிதம்பரம் கூறியுள்ளதாவது:
Recommended Video

நரகத்தின் பாதையில்
"சட்டத்துக்கான ஆட்சி ஒவ்வொரு நாளும் உடைந்து போவதை நாம் காண்கிறோம். விரைவில் சட்டமும் இல்லை. விதிகளும் இல்லை என்ற நிலை வரும். தன்னிச்சை உத்தரவில் சட்டத்தை மீறுவதன் மூலம் நாம் நரகரத்துக்கான பாதையில் இருக்கிறோம். இங்கு புல்டோசர் தன்னிச்சையான உத்தரவையும், உச்சநீதிமன்றம் சட்ட உத்தரவையும் நிலைநாட்டுகிறது. நேற்று புல்டோசர் சட்டத்தை மீறியதை பார்த்தோம். இன்று என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications