‛‛எங்களுக்கு நீட் தேர்வே வேண்டாம்’’.. நேராக உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு.. மனுவில் இருப்பது என்ன?
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்வதில் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் சில மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. மேலும் 2021 தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தது.

நீட் விலக்கு மசோதா
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தது. மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்
இதைடுத்து இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். இதுபற்றிய செய்தியை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு சார்பிலான கருத்துக்கள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நீட் விலக்கு மசோதா அப்படியே பெண்டிங்கில் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
இந்நிலையில் தான் நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் மாணவர்களின பிரச்சனைகள் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டள்ளன. இந்த மனுவில் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மனுவில் இருப்பது என்ன?
நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கூட்டாச்சி கொள்கையை மீறும் வகையில் நீட் உள்ளது. இதனால் மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும் நீட் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது'' என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications