வேலைவாய்ப்பை உருவாக்கினோம்.. உங்களுக்குத்தான் தெரியவில்லை.. பாஜக அமைச்சர்கள் பேசுவதை பாருங்க!

கடந்த 4.5 வருடத்தில் மத்திய அரசு நிறைய வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாக மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வேலைவாய்ப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் பேசியதை பாருங்கள்- வீடியோ

    டெல்லி: கடந்த 4.5 வருடத்தில் மத்திய அரசு நிறைய வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை பெரிய பூதாகரமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி வரும் லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இதை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    உருவாக்கி இருக்கிறோம்

    உருவாக்கி இருக்கிறோம்

    அவர்கள் தங்கள் பேட்டியில், கடந்த 4.5 வருடத்தில் நாங்கள் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக அரசு துறையில் மட்டுமில்லாமல் தனியாரிலும் வேலை வாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது. அதேபோல் சுயமாக தொழில் தொடங்குவதும் அதிகம் ஆகி இருக்கிறது.

    தவறான கருத்து

    தவறான கருத்து

    ரயில்வேத்துறையில் 1.5 கோடி பேர் வேலைக்கு விண்ணப்பித்ததை வைத்து, மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள் என்று கூற கூடாது. அவர்கள் ரயில்வே துறையில் வேலைக்காக காத்து இருக்கலாம். நாங்கள் பல துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கிறோம். நிறைய துறைகளில் காலி இடங்கள் இப்போதும் இருக்கிறது.

    வேலை பார்க்காதவர்கள்

    வேலை பார்க்காதவர்கள்

    தங்களுக்கு விருப்பப்பட்டு வேலை பார்க்காமல் இருக்கும் நபர்களை, வேலை இல்லாதவர்கள் என்று கருத முடியாது. அதேபோல் பலர் சுயமாக தொழில் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் என்று கருத்தில் கொள்ள வேண்டும். அரசு துறையிலும் கணிசமான வேலை வாய்ப்பை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

    சிஸ்டத்தை மாற்ற வேண்டும்

    சிஸ்டத்தை மாற்ற வேண்டும்

    ஆனால் இதற்கான தரவுகள் சரியாக சேகரிக்கப்படவில்லை. இதை சேகரிப்பதற்கான முறையை மாற்ற வேண்டும். பல முறைகளை கைவிட்டு புதிய முறைப்படி எத்தனை பேர் வேலை வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். பழைய சிஸ்டம் மூலம் உண்மையான தகவல்கள் வெளியே தெரிவது இல்லை என்று பியூஸ் கோயல் மற்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+