டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைரசோடு வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.. வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை.. மத்திய சுகாதாரத்துறை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு, சமூகத்தில் இருந்தாலும், நாம் அதனுடன் தொடர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும், மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 1,273 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

We have to learn to live with the virus, says Health Ministry spokesperson

ஒருபக்கம் அதிகப்படியான மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தாலும் கூட, மற்றொரு பக்கம் குணமடையும் விகிதம் என்பது அதிகரித்துள்ளது. தற்போது குணமடையும் விகிதம் என்பது 29.6 என்ற அளவில் உள்ளது. இதுநாள் வரையில் 16 ஆயிரத்து 540 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37 ஆயிரத்து 916 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்வது உள்ளிட்ட விவகாரங்கள் தற்போது சர்ச்சைக்குரியதாக பேசப்படுகின்றன. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த வைரசுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

சமூகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் அதனால் நாம் பாதிக்கப்படாத அளவுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

We have to learn to live with the virus, says Health Ministry spokesperson

ஒவ்வொருவரும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் தேவைப்படும். இவ்வாறு லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மூவாயிரத்தை கடந்தது சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தமிழக மொத்த பாதிப்பில் 50% இங்குதான்மூவாயிரத்தை கடந்தது சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தமிழக மொத்த பாதிப்பில் 50% இங்குதான்

மேலும், ஜூன் மாதம் வாக்கில் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று அறிக்கைகள் கூறியிருந்த நிலையில், அதை லாவ் அகர்வால் மறுத்தார். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருந்தால், வைரஸ் பாதிப்பு என்பது அதிகரிக்காது. உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்தான் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Central government on Friday suggested that people will have to learn to live with the corona virus situation and said the guidelines against the Covid-19 need to implemented as behavioral changes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X