வங்கதேசம் போன பாகிஸ்தான் உளவாளிகள்.. மத்திய அரசின் பிளான் என்ன? அதிகாரி விளக்கம்
டெல்லி: நம்நாட்டை சீண்டி பார்க்கும் வங்கதேசம், பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்துள்ளது. முதல் முறையாக பாகிஸ்தானின் உளவு பிரிவு அதிகாரிகள் வங்கதேசம் சென்றதோடு, நம் நாட்டு எல்லை அருகே ஆய்வு மேற்கொண்டு, சிறையில் இருக்கும் அசாம் பிரிவினைவாதி பயங்கரவாதியை சந்தித்துள்ளனர். இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்திற்கும் நம் நாட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. வங்கதேசம் - பாகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் வங்கதேசத்தில் 4 நாள் விசிட் செய்துள்ளனர்.

இந்த குழுவவில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசீம் மாலிக், மேஜர் ஜெனரல் ஷாகித் அமீர் அப்சர், மேஜனல்ஆலம் அமீர் அவான், முகமது உஸ்மான் ஜாதிப் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
இவர்கள் நம் நாட்டுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் சிலிகுரி காரிடாரில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவுக்கு ரகசிய விசிட் செய்துள்ளனர். அதோடு பாகிஸ்தான் அதிகாரிகள் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள உல்பா (ULFA) கமாண்டர் பரேஷ் பருவா என்பவரை சந்தித்துள்ளனர். இவர் நம் நாட்டிடம் இருந்து அசாமை தனியாக பிரிக்க திட்டமிட்டு சதிவேலை செய்தவர். இதனால் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரிகள் வங்கதேசத்தில் விசிட் செய்தது பற்றி நேற்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. வாரம் ஒருமுறை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த வகையில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தான் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
‛‛நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களின் மீதும் கண்வைத்துள்ளோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் நோக்கத்தில் நம் பிராந்தியத்தில் நடக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதோடு இந்த நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளது.
நாம் ஜனநாயக, முற்போக்கை உள்ளடக்கிய ஆட்சியை வங்கதேசத்தில் ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் வங்காளதேச மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்த விரும்புகிறோம். இருநாட்டு எல்லையில் வேலி அமைக்கும் பணி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications