நீதியை காக்கவில்லை என்றால்.. நிலைமை மோசமாகிவிடும்.. அர்னாப் வழக்கில் கொந்தளித்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை ஹைகோர்ட் பெயில் வழங்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மஹாராஷ்ட்ராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். அன்வே நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது. இந்த நிலையில் மும்பை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக அர்னாப் கோஸ்வாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.

விசாரணை
இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மஹாராஷ்டிரா போலீஸ் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி சந்திரசூட் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தும், அர்னாப் கோஸ்வாமிக்கு பெயில் வழங்காததை கண்டித்தும் சந்திரசூட் பேசி இருந்தார்.

சந்திரசூட்
சந்திரசூட் பேசுகையில், நாயக்கை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது எப்படி வழக்கு பதிவு செய்தனர். ஒரு நபர் இன்னொரு நபருக்கு கடன் கொடுக்கிறார்.. திடீரென கடன் கொடுத்த நபர் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்கிறார் என்றால்.. கடன் வாங்கிய நபர் மீது எப்படி குற்றச்சாட்டு வைக்க முடியும்? ஏ என்ற நபர் பி என்ற நபரிடம் கடன் வாங்கி உள்ளார்.

தற்கொலை
இப்போது பி என்ற நபர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஏ என்ற நபர் எப்படி பொறுப்பாக முடியும்? என்று சந்திரசூட் கேட்டுள்ளார். நாயக்கை அர்னாப் தற்கொலைக்கு தூண்டியதற்கான சாத்திய கூறு இதில் எங்கே இருக்கிறது. நாயக் தற்கொலை செய்து கொண்டார், அது பணத்தட்டுப்பாடு காரணமாக.. இதில் அர்னாப்பை ஏன் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

நீதிமன்றம்
இதில் முதல் தகவல் அறிக்கையே முழுமையாக பதிவு செய்யபடவில்லை. அப்படி இருக்கும் போது.. பெயில் கொடுக்காமல் இருப்பதில் என்ன அர்த்தம் என்று சந்திரசூட் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த நேரத்தில் நாங்கள் அதிரடியாக செயல்பட்டு சட்டத்தை காப்பாற்றவில்லை என்றால்.. வேறு யார் காப்பாற்றுவார்கள்.?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications