2 உலகப் போரிலிருந்து மீண்டு வந்தோம்.. பாடம் கற்க வேண்டும்.. ப்ளூம்பெர்க் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
டெல்லி: இரண்டு உலகப் போர்களுக்கு பின் மக்கள் வேகமாக செயல்பட்டது போல கொரோனா பாதிப்பிற்கு பின்பும் மக்கள் வேகமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று இணையவழி மாநாடு நடத்தப்பட்டது.இணைய வழி நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதை தொடர்ந்து ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி இணைய வழி உரை நிகழ்த்தினார். வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

மோடி
இதில் பேசிய மோடி, கொரோனாவிற்கு பின் வாழ்க்கை முறை மாறிவிட்டது மக்கள் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கல்விமுறை இனி இதேபோல் இருக்காது. இனி உலகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. உலகத்தின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்.

என்ன சொன்னார்
மக்கள் தங்கள் மனநிலை, செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இரண்டு உலகப் போர்களுக்கு பின் மக்கள் செயல்பட்டது போல இனி செயல்பட வேண்டும். இரண்டு உலக போர்களுக்கு பின் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதேபோன்ற மாற்றங்களை ஏற்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கொரோனா
கொரோனா காரணமாக பல்வேறு துறைகளில் விதிமுறைகள் மாறி உள்ளது. எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது நிலவும் வாய்ப்பை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லாக்டவுன் காலத்தில் பல நகரங்களில் தூய்மை பணிகள் நடந்துள்ளது.

சுத்தம் செய்தனர்
சாலைகள், ஏரிகள், குளங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை சுத்தம் அடைந்துள்ளது, மாசு குறைந்துள்ளது. கிராமங்கள் போன்ற தூய்மையான காற்று மற்றும் இயற்கையுடன் நாம் நகரங்களை கட்டமைக்க வேண்டும், கிராமங்களையும் முன்னேற்ற வேண்டும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications